

சிவகங்கை அருகே சாலையோரத்தில் ஆங்காங்கே நோயாளிகளுக்கு வழங் கும் ஓஆர்எஸ் பவுடர் பாக்கெட்டு கள் குவியலாகக் கிடக்கின்றன.
வாந்தி, வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு நீர்ச்சத்து குறைந்த வர்களுக்கு ஓஆர்எஸ் (ஓரல் ரிஹைட்ராக்சன் சொலுஸன்ஸ்) பவுடர் வழங்கப்படும். அதே போல், உடல் சோர்வால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் இந்த பவுடரை வழங்குவர். குறிப்பாக, வயிற்றுப் போக்கால் பாதிக்கப்படும் 5 வயதுக் குட்பட்ட குழந்தைகளுக்கு ஓஆர்எஸ் பவுடர் கரைசலை கட்டாயம் கொடுக்க வேண்டுமென சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதற்காக சுகாதாரத்துறை மூலம் அங்கன்வாடி மையங்களில் ஓஆர்எஸ் பவுடர் பாக்கெட் வழங்கப் படுகிறது. இது குளுக்கோஸ் போன்று குழந்தைகளுக்கு புத்துணர்வை கொடுப்பதோடு, வயிற்றுப் போக்கையும் தடுக்கிறது. மேலும் ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் சிவகங்கையை அடுத்த காட்டு குடியிருப்பு பகு திக்கு அருகே சாலையோரத்தில் ஆங்காங்கே ஓஆர்எஸ் பவுடர் பாக்கெட்டுகள் கொட்டிக் கிடக்கின் றன. இதேபோல் ஓஆர்எஸ் பாக் கெட்டுகளை நோயாளிகளுக்கு முறையாக வழங்காமல் சுகாதாரத் துறையினர் வீணாக்கி வரு கின்றனர்.
ஓஆர்எஸ் பாக்கெட்டுகளை சாலையோரத்தில் கொட்டியது குறித்து சுகாதாரத்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோடை காலம் தொடங்கிய நிலையில் பலருக்கும் நீர்ச்சத்து குறைய வாய்ப்புள்ளது. இதனால் ஓஆர்எஸ் பாக்கெட்டுகளை வீணாக்காமல், மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வருவோருக்கு வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.