

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயிலைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவி, வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, எதிரே மது போதையில் வந்த இளைஞர் ஒருவர் திடீரென அம்மாணவியைக் கட்டிப் பிடித்தார். இதனை சற்றும் எதிர் பாராத மாணவி அதிர்ச்சியடைந்து கூச்ச லிட்டார். சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வருவதைப் பார்த்த மது போதை இளைஞர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
சிறையில் அடைப்பு
மாணவியின் பெற்றோர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸ் விசார ணையில், மது போதையில் மாணவியைக் கட்டிப் பிடித்த அந்த நபர், திருமுல்லைவாயில் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் தர்மராஜ்(28) என்பதும்; இவர் ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் 13-வது அணியில் போலீஸ்காரராக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு தர்மராஜை ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து நேற்று திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தப்பட்ட போலீஸ்காரர் தர்மராஜ், புழல் சிறையில் அடைக்கப் பட்டார்.