Published : 13 Dec 2015 10:55 AM
Last Updated : 13 Dec 2015 10:55 AM

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் சேதமடைந்த ஆவணங்களுக்கு நகல் சான்றிதழ்கள் பெற நாளை முதல் சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட அல்லது சேதம டைந்த பட்டா உள்ளிட்ட சான்றிதழ்களின் நகலைப் பெறுவதற்கான சிறப்பு முகாம் இம்மாதம் 14-ம் தேதி (நாளை) முதல் தொடங் குகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கஜ லட்சுமி விடுத்துள்ள அறிக்கையில் முகாம் நடைபெறும் இடங்கள் தேதி வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

காஞ்சிபுரம் வட்டம்

காஞ்சிபுரம் குறுவட்டத்துக்கு 14 முதல் 19-ம் தேதி வரை அண்ணா அரங் கத்திலும் சிறுகாவேரிபாக்கம் குறுவட்டம் 20, 21 தேதிகளில் வட்டார வளர்ச்சி அலு வலகத்திலும் திருப்புட்குழி குறுவட்டம் 22, 23 தேதிகளில் தாமல் அண்ணா சமூ தாயகூடத்திலும் சிட்டியம்பாக்கம், பரந்தூர் குறுவட்டம் 24, 25 தேதிகளில் பரந்தூர் சமுதாயகூடத்திலும் கோவிந்தவாடி குறு வட்டம் 26, 27 தேதிகளில் கோவிந்தவாடி சமுதாயகூடத்திலும் வாலாஜாபாத் வட் டத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலகத் திலும் உத்திரமேரூர் வட்டத்துக்கு அதே பகுதியில் உள்ள சக்தி திருமண மண் டபத்திலும் 14 முதல் 27-ம் தேதிவரை நடக்கிறது.

ஸ்ரீபெரும்புதூர் வட்டம்

ஸ்ரீபெரும்புதூர் குறுவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகத்திலும் வரதராஜ புரம், படப்பை குறுவட்டத்தில் முடிச் சூர் சிஎஸ்ஐ தேவாலயத்திலும் குன்றத் தூர் குறுவட்டத்தில் அங்குள்ள சமுதாய கூடத்திலும் மாங்காடு குறுவட்டத்தில் கொளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி யிலும் வரும் 14 முதல் 20-ம் தேதி வரை நடக்கிறது.

செங்கல்பட்டு வட்டம்

ஊரப்பாக்கம் சமுதாயக் கூடத்தில் வரும் 14, 15 தேதிகளிலும் மண்ணிவாக்கம் சமுதாய கூடத்தில் 16,17 தேதிகளிலும் வண்டலூரில் விஏஓ அலுவலகத்தில் 18, 19 தேதிகளிலும் நெடுங்குன்றத்தில் விஏஓ அலுவலகத்தில் 20, 21 தேதிகளிலும் வண்டலூர் குறுவட்டத்துக்கு அங்குள்ள சமுதாயக் கூடத்தில் வரும் 22, 23 தேதிகளிலும் நந்திரவம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி அலுவலகத்தில் 24,25 தேதி களிலும் கூடுவாஞ்சேரி குறுவட்டம் பேரூ ராட்சி பகுதி நீங்கலாக உள்ள பகுதிகளுக்கு வரும் 26, 27 தேதிகளில் ஆர்ஐ அலுவல கத்திலும் காட்டாங்கொளத்தூர் குறுவட்டத் துக்கு வரும் 14, 15 தேதிகளில் மறை மலைநகர் நகராட்சி அலுவலகத்திலும் சிங்கபெருமாள்கோவில் ஆர்ஐ அலு வலகத்தில் 16,17 தேதிகளிலும் ஆப்பூர் குறுவட்டத்துக்கு விஏஓ அலுவலகத்தில் 18, 19 தேதிகளிலும் பாலூர் குறுவட்டத்துக்கு ஆர்ஐ அலுவலகத்தில் 20, 21 தேதிகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது.

அதேபோல், செங்கல்பட்டு நகரம் 22, 23 தேதிகளில் நகராட்சி அலுவலகத்திலும் செங்கல்பட்டு குறுவட்டம் 24, 25 தேதிகளில் செங்கல்பட்டு ஆர்ஐ அலுவலகத்திலும். திம்மாவரம் ஊராட்சிக்கு விஏஓ அலுவ லகத்தில் 26,27 தேதிகளிலும் முகாம் நடக்கிறது.

திருப்போரூர் வட்டம்

திருப்போரூர் குறுவட்டம் 14,15ம் தேதிகளில் ஆர்ஐ அலுவலகத்திலும் பைய னூர் குறுவட்டத்தில் அங்குள்ள சமு தாயக் கூடத்தில் 16,17 தேதிகளிலும் கேளம்பாக்கம் குறுவட்டத்துக்கு ஆர்ஐ அலுவலகத்தில் 18, 19 தேதிகளிலும் மானம்பதி, கரும்பாக்கம், நெல்லிக்குப்பம், மாம்பாக்கம் ஆகிய குறுவட்டங்களில் முறையே 20 முதல் 27-ம் தேதிவரை தனியார் திருமண மண்டபங்களிலும் முகாம் நடைபெறுகிறது.

திருக்கழுக்குன்றம் வட்டம்

திருக்கழுக்குன்றம், புதுப்பட்டினம், நெரும்பூர், பொன்விளைந்த களத்தூர், மாமல்லபுரம் ஆகிய குறுவட்டம் மற்றும் எடையாத்தூர், இரும்புலிச்சேரிக்கு டிச. 14 முதல் 27-ம் தேதிவரை கிராம நிர்வாக அலுவலகங்களில் நடைபெறுகிறது.

தாம்பரம் வட்டம்

முடிச்சூர் பகுதிக்கு 14,15 தேதிகளில் ஊராட்சி அலுவலகத்திலும் பெருங் களத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் 16,17 தேதிகளிலும் செம்பாக்கம்,ராஜகீழ்பாக்கம், கவுரிவாக்கம் பகுதிக்கு 18, 19 தேதிகளில் செம்பாக்கம் நகராட்சி அலுவலகத்திலும்

தாம்பரம் நகராட்சி, சேலையூர், இரும்புலியூர்,கடப்பேரி, புலிக்கொரடு பகுதிகளிக்கு 20, 21 தேதிகளில் டிஜிபி திருமண மண்டபத்திலும் சிட்லபாக்கம் குறுவட்டம், பீர்க்கண்கரணை பகுதிக ளுக்கு 22 முதல் 25-ம் தேதிவரை பேரூராட்சி அலுவலகத்திலும் மாடம்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் 26, 27 தேதிகளிலும் திருநீர்மலைக்கு பேரூராட்சி அலுவலகத்தில் 14, 15 தேதிகளிலும் அனகாபுத்தூர், பொழிச்சலூர், பம்பல், நந்தம்பாக்கம் பர்மா காலனி, மீனம்பாக்கம் பகுதிகளில் முறையே 16 முதல் 25-ம் தேதிவரை அந்தந்த பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் நடை பெறுகிறது.

சோழிங்கநல்லூர் வட்டத்துக்கு ஊராட்சி அலுவலகம் மற்றும் ஈஞ்சம்பாக்கம் புயல்மையத்திலும் மதுராந்தகம் வட்டம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகத்திலும் செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் வரும்14 முதல் 25-ம் தேதிவரை சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.

இந்த முகாம்களில் பொதுமக்களின் விண்ணப்பத்தின்பேரில் ஒரு வார காலத்தில் நகல் ஆவணங்களை இலவச மாக வழங்குவார்கள் என ஆட்சியர் தெரி வித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூரில் மழையால் சான்றிதழ் களை இழந்தவர்களுக்கு புதிய சான்றிதழ்களை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நாளை தொடங்கி, 28-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்காக சிறப்பு முகாம் நடத்துவது குறித்து, திருவள்ளூர் மாவட்ட மழை நிவாரண உதவிக்கான ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.பிரபாகரன், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது.

பொதுமக்கள் இழந்துள்ள நிலம் மற்றும் வீட்டுமனைப் பட்டா, கல்விச் சான்றிதழ், காஸ் இணைப்புப் புத்தகம், ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், நிலம், வீட்டு கிரயப் பத்திரம், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவுசான்று உள்ளிட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை திரும்ப வழங்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 11 வட்டங்களில், 25 மையங்களில் வருகிற 14-ம் தேதி (நாளை) முதல் 28-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

முகாம் நடைபெறும் இடங்கள்

* திருவள்ளூர் வட்டம்: செயின்ட் ஆனிஸ் பள்ளி, திருவள்ளூர். அரசு மேல் நிலைப் பள்ளி, வெங்கல். வட்டார வளர்ச்சி அலுவலகம், கடம்பத்தூர்.

* பூவிருந்தவல்லி வட்டம்: அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காமராஜர் நகர், ஆவடி. தாசர் மேல்நிலைப் பள்ளி, திரு நின்றவூர். வட்டாட்சியர் அலுவலகம், பூவிருந்தவல்லி.

* ஊத்துக்கோட்டை வட்டம்: வட்டாட்சியர் அலுவலகம், ஊத்துக்கோட்டை. வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், பெரிய பாளையம்.

* திருத்தணி வட்டம்: வட்டாட்சியர் அலுவலகம், திருத்தணி. வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், திருவாலங்காடு.

* பள்ளிப்பட்டு வட்டம்: வட்டாட்சியர் அலுவலகம், பள்ளிப்பட்டு. வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், ஆர்.கே.பேட்டை.

* கும்மிடிப்பூண்டி வட்டம்: வட்டாட்சியர் அலுவலகம், கும்மிடிப்பூண்டி.

* பொன்னேரி வட்டம்: குழந்தை ஏசு தேவாலயம், விச்சூர். பி.யு.ஈ. பள்ளி, தத்தமஞ்சி. வட்டார வளர்ச்சி அலுவலர், சோழவரம். எல்.என்.ஜி. கல்லூரி, பொன்னேரி.

* அம்பத்தூர் வட்டம்: அரசு மேல்நிலைப் பள்ளி, பாடிக்குப்பம், பாடி. அரசு மேல்நிலைப் பள்ளி, சோழம்பேடு, திருமுல்லைவாயல்.

* மாதவரம் வட்டம்: அரசு மேல்நிலைப் பள்ளி, மாதவரம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செங்குன்றம்.

* திருவொற்றியூர் வட்டம்: வெள்ளஞ் செட்டி மேல்நிலைப் பள்ளி, திருவொற்றியூர். அரசு மேல்நிலைப் பள்ளி, மணலி.

* மதுரவாயல் வட்டம்: அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயல். சமுதாயக் கூடம், அயப்பாக்கம்.

இந்த முகாம்களில் தமிழக அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்களின் அலுவலர்கள் கலந்து கொண்டு, மக்க ளிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்று ஒரு வார காலத்துக்குள் நகல் ஆவணங் களை கட்டணமின்றி வழங்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x