

தத்கால் ரயில் கட்டணம் உயர்வு குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்காததால், ரயில் டிக்கெட் முன்பதிவு கவுன்ட்டர்களில் இருந்த அலுவலர்களிடம் பயணிகள் நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விரைவு ரயில்களில் மொத்த முள்ள முன்பதிவு பெட்டிகளில் 30 சதவீத டிக்கெட்கள் தத்கால் முறையில் முன்பதிவு செய்யப் படுகின்றன. அவசரத்துக்கு திடீரென ரயில்களில் பயணம் மேற்கொள் பவர்கள் தத்கால் டிக்கெட் முறை யையே நம்பியுள்ளனர். தத்கால் டிக்கெட் வாங்க பொதுமக்களி டையே கடும் போட்டி ஏற்படும்.
மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலவரப்படி, இருக்கை வசதிக்கு ரூ.10 முதல் ரூ.15 (100 கி.மீ) (மாற்றம் இல்லை), படுக்கை வசதிக்கு ரூ.100 முதல் ரூ.200 (500 கி.மீ), ஏசி வசதிக்கு ரூ.125 முதல் ரூ.225 (250 கி.மீ.), ஏசி 3-ம் வகுப்பு ரூ.300 முதல் ரூ.400 (500 கி.மீ.), ஏசி 2-ம் வகுப்பு ரூ.400 முதல் ரூ.500 (500 கி.மீ.) எக்ஸ்சிகியூடிவ் வகுப்பு ரூ.400 முதல் ரூ.500 (250 கி.மீ.) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச, குறைந்தபட்ச கட்ட ணங்கள் பயண தூரத்துக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுகின்றன. இரண்டாம் வகுப்பு அமரும் வசதி கொண்ட பெட்டிகளுக்கான தத்கால் முன்பதிவுக் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தத்கால் சிறப்பு ரயில்கள் முறை அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், போதுமான கால அவகாசமின்றி, தத்கால் டிக்கெட் கட்டணம் 10 முதல் 40 சதவீதம் வரை அதிரடியாக உயர்த் தப்பட்டு 25-ம் தேதி (இன்று) நடைமுறைக்கு வருகிறது என ரயில்வே வாரியம் நேற்று முன் தினம் அறிவித்துள்ளது.
ஆனால், பெரும்பாலான பயணிகளுக்கு இந்த கட்டண உயர்வு தெரியாததால் நேற்று திடீரென அதிர்ச்சி யடைந்தனர். இதையடுத்து, கவுன்ட்டர்களில் இருந்து ரயில்வே அலுவலர்களிடம் பயணிகள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பயணிகள் அதிர்ச்சி
இது தொடர்பாக ரயில் பயணி களிடம் கேட்ட போது, ‘‘ரயில் தத்கால் கட்டண உயர்வு பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. இங்கு வந்து டிக்கெட் எடுக்கும் போதுதான் தெரிகிறது. அவசர பயணத்துக்கு தத்கால் டிக்கெட் முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் முன்னறிவிப்பே இல்லாமல் கட்டண உயர்வை திடீரென நடைமுறைப்படுத்துவது ஏமாற்றம் அளிக்கிறது’’ என்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் எதிர்ப்பு
“தத்கால் கட்டணத்தை 10 முதல் 40 சதவீதம் வரை உயர்த்தி அறிவித்துள்ளது கண்டனத்துக்குரி யது. இது தனியார் ஆம்னி பஸ்கள், கட்டணத்தை நேரத்துக்கு ஏற்ப உயர்த்தி அறிவிப்பதற்கு இணையானது. இதுபோன்ற நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.