தமிழகத்தில் அதிகரிக்கும் கரோனா பரவல் - அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் அதிகரிக்கும் கரோனா பரவல் - அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை
Updated on
2 min read

கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை கள் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரி களுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் கடந்த மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் தினசரி பரவல் 6 ஆயிரத்தை தொட்டது. கரோனாவால் உயிரிழப்பும் தினமும் 20-ஐ தாண்டியுள்ளது. அரசின் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, மாநிலத் தில் கரோனா பரிசோதனைகள் அதிகரிக் கப்பட்டுள்ளன. இதனால், பாதிக்கப்பட்ட வர்கள் அதிக அளவில் கண்டறியப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு கரோனா பரவல் அதிகரித்தபோது படுக்கை வசதி களுடன் பல்வேறு கரோனா கேர் மையங் கள் உருவாக்கப்பட்டன. அதேபோல இப்போதும் கரோனா மையங்கள் உரு வாக்கப்பட்டு வருகின்றன.

கரோனா பரவல் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, காணொலி மூலம் ஆலோசனை நடத் தினார். அப்போது, ‘கரோனா பரவல் அதி கரிக்கும் மாநிலங்களில் பரிசோதனைகளை அதிகரிப்பதுடன், கட்டுப்பாடுகளையும் விதிக்க வேண்டும்’ என பிரதமர் அறி வுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் நேற்று முன்தினம் (10-ம் தேதி) முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரு விழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி தவிர இதர மாநி லங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பதிவு கட்டாயமாக் கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கூடுவதற்கு தடை

இதுதுவிர, பேருந்துகளில் அமர்ந்து பயணிக்க மட்டுமே அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திரு வள்ளூர் மாவட்ட கடற்கரை பகுதிகளில் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணிதல், சமூக இடை வெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட வழி காட்டு முறைகள் கடுமையாக்கப்பட் டுள்ளன. இவற்றை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நடவடிக்கைகளில் பலன் கிடைக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக் கப்படும் என்று பொதுமக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கரோனா பாதிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கை கள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி முடிந்தது. அதன்பின் சேலத்தில் ஓய்வெடுத்து வந்த முதல்வர் பழனிசாமி, நேற்று முன்தினம் சென்னை வந்தார்.

இதன் தொடர்ச்சியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பகல் 12 மணிக்கு கரோனா பாதிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. முதல்வர் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலர், சுகாதாரம், வருவாய் உள்ளிட்ட துறைகளின் செயலாளர்கள், அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தைத் தொடர்ந்து, அரசு தரப்பில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடி வடைந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. அத்துடன் கரோனா பரவல் உச்சகட்டத்தில் இருப்பதால் முதல்வரின் ஆலோசனை கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in