தமிழகம்
கரோனா பரவலால் தங்கத்தில் முதலீடு 10% அதிகரிப்பு
கரோனா பரவல் கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, பலரும்தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து, தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
இதுகுறித்து சென்னை தங்கம், வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, ‘‘முன்பெல்லாம் சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்ந்தாலும், இந்திய ரூபாய் மதிப்பு சற்று வலுவாக இருந்ததால், தங்கம் விலை ஓரளவு கட்டுக்குள் இருக்கும். தற்போது கரோனா பரவலால் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களில் தங்கத்தில் முதலீடு செய்வது 10 சதவீதம் அதிகரித்துள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால், தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது’’ என்றார்.
