

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சுரப்பாவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக எம்.கே.சுரப்பா கடந்த 2018 ஏப்ரலில்நியமிக்கப்பட்டார். துணைவேந்தரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள். அந்த வகையில், சுரப்பாவின் 3 ஆண்டு பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. அவர் பதவி நீட்டிப்பு கோரியிருந்தார். ஆனால்,அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இதற்கிடையில், சுரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டை ஓய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான ஆணையம் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கிவருகின்றன. அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிஇன்று முதல் காலியாக இருப்பதால், அடுத்த சில நாட்களில் உயர்கல்வித் துறை செயலர்தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை இந்த ஒருங்கிணைப்புக் குழுதான் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை கவனிக்கும்.