Published : 12 Apr 2021 03:18 AM
Last Updated : 12 Apr 2021 03:18 AM

மறு குடியமர்வு திட்டத்தின் கீழ் இடமாற்றம் செய்யப்படும் பழங்குடியினருக்கான பணப்பலன் ரூ.15 லட்சமாக உயர்வு: முதுமலை கள இயக்குநர் கே.கே.கவுசல் தகவல்

முதுமலை

தமிழகத்தில் உள்ள புலிகள்காப்பகங்களில் இருந்து வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கு,‘கோல்டன் ஹேண்ட்ஷேக்’ திட்டத்தில் வழங்கப்படும் பணப்பலன் ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் புகழ் பெற்ற முதுமலை சரணாலயம், கடந்த 2007-ம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

அதன்பின்பு புலிகளின்பாதுகாப்புகருதி வனத்தில் உள்ளபழங்குடியினரை இடமாற்றம் செய்யும் திட்டமும் அறிவிக்கப் பட்டது. ‘கோல்டன் ஹேண்ட்ஷேக்’ என பெயரிடப்பட்ட மறுகுடியமர்வு திட்டத்தின் கீழ் வனத்திலிருந்து இடமாற்றம் செய்யப்படும் ஒருகுடும்பத்துக்கு ரூ.10 லட்சம்நிவாரணம் அறிவிக்கப்பட்டிருந்தது.

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டு பென்னை, நெள்ளிக்கரை, நாகம்பள்ளி, மண்டக்கரை, புலியம்பாளையம், முதுகுழி மற்றும் குடித்தகன்ஆகிய 7 பழங்குடியினர் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 807 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இக்குடும்பங்களை மறுகுடியமர்த்த பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட அய்யன்கொல்லி, சன்னக்கொல்லி பகுதியில் 284 ஹெக்டர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறும்போது, ‘‘தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளபடி முதல்கட்டமாக 235 குடும்பங்களுக்கும், 2-ம் கட்டமாக 255 குடும்பங்களுக்கும் பணப்பலன்கள் வழங்கப்பட்டு, குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

மூன்றாவது கட்டமாக 168 குடும்பங்களுக்கு மாற்றுக் குடியிருப்புகள் கட்டும் பணிகள் தொடங்கப்படவுள்ளன’’ என்றார்.

முதுமலை கள இயக்குநர் கே.கே.கவுசல் கூறும்போது, ‘‘மறு குடியமர்வு திட்டத்தின் கீழ் பணப்பலனை ரூ.15 லட்சமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநில அரசின் பங்கு குறித்த விவரம் கிடைத்தபின், திட்டம் செயல்படுத்தும் விவரங்கள் தெரிவிக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x