பாஸ்போர்ட் இழந்தவர்களுக்கு சென்னையில் 12-ல் சிறப்பு முகாம்

பாஸ்போர்ட் இழந்தவர்களுக்கு சென்னையில் 12-ல் சிறப்பு முகாம்
Updated on
1 min read

வெள்ளத்தால் சேதம் அடைந்த பாஸ் போர்ட்களை புதிதாக மாற்றிக் கொள்ள 12-ம் தேதி சிறப்பு பாஸ்போர்ட் முகாம் சென்னையில் நடைபெறுகிறது.

இதுகுறித்து மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் கூறியதாவது:

மழை வெள்ளத்தில் தங்களுடைய பாஸ்போர்ட்களை இழந்தவர்களுக்கு உதவும் பொருட்டு சென்னையில் வரும் சனிக்கிழமை (12-ம் தேதி) சிறப்பு பாஸ்போர்ட் முகாம் நடத்தப்பட உள்ளது. அமைந்தகரை, வளசரவாக்கம், தாம்பரத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்களில் இந்த முகாம் நடைபெறும். மேலும், இவர்களுக்கு புதிதாக பாஸ் போர்ட் பெறுவதற்கான ரூ.3000 கட்டணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதைத் தவிர, பொதுமக்கள் சாதாரண நாட்களிலும் வந்து பெற்றுக் கொள்ளலாம். இதன்படி, டிச. 8-ம் தேதியில் இருந்து 2 மாதத்துக்குள் புதிய பாஸ்போர்ட்களை பெற்றுக் கொள்ளலாம். இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு ஆர். பாலசுப்பிரமணியனை (044-28525554 / 28513640 / 28513638) தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in