வீரராகவ பெருமாள் கோயில் பூட்டப்பட்டும் நுழைவாயில் முன்பு குவிந்த பக்தர்கள்

அமாவாசை நாளான நேற்று வீரராகவ பெருமாள் கோயில் பூட்டப்பட்டும், நுழைவாயில் முன்பு நூற்றுக்கணக்கில் குவிந்த பக்தர்கள்.
அமாவாசை நாளான நேற்று வீரராகவ பெருமாள் கோயில் பூட்டப்பட்டும், நுழைவாயில் முன்பு நூற்றுக்கணக்கில் குவிந்த பக்தர்கள்.
Updated on
1 min read

திருவள்ளூரில் உள்ள பழமையான வீரராகவ பெருமாள் கோயிலுக்கு, ஒவ்வொரு அமாவாசையன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் தெப்பக் குளத்தில் நீராடி, முன்னோருக்கு தர்ப்பணம் செய்து, சுவாமியை வழிபடுவர்.

இந்நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நேற்று முன்தினம் மதியம் முதல், அமாவாசை நாளான நேற்று இரவு வரை பக்தர்கள் தரிசனத்தை ரத்து செய்த கோயில் நிர்வாகம், நேற்று கோயிலை பூட்டியிருந்தது. இதுகுறித்து, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஏரிக்கரையில் தர்ப்பணம்

இச்சூழலில், கோயில் நிர்வாகத்தின் அறிவிப்பை பொருட்படுத்தாத பக்தர்கள் நூற்றுக்கணக்கில் வழக்கம் போல் நேற்று காலை திருவள்ளூருக்கு வந்தனர். அவர்கள் பூட்டப்பட்டிருந்த கோயில் நுழைவாயில் முன்பு கூடி, கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

அதுமட்டுமல்லாமல், திரளான பக்தர்கள், கோயில் அருகே உள்ள காக்களூர் ஏரிக்கரை பகுதியில் தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மேற்கொள்ளப்பட்ட இந்த வழிபாடு பொதுமக்கள் மத்தியில் கரோனா பீதியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in