திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் சசிகலா வழிபாடு

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த சசிகலா.
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த சசிகலா.
Updated on
1 min read

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் சசிகலா நேற்று வழிபட்டார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர், விடுதலையாகி தமிழகம் வந்த சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்குவதாகத் தெரிவித்திருந்தார்.

கடந்த ஒரு மாதமாக திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், ரங்கம் அரங்கநாதர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் வழிபட்டார்.

இந்நிலையில், நேற்று காலை திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலுக்கு சசிகலா, மூலவர் தேவி கருமாரியம்மன், உற்சவர் அம்மன், பிரத்தியங்கிரா தேவி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் வழிபட்டார்.

மேலும், கோயிலில் நடைபெற்ற 108 சங்காபிஷேக பூஜையிலும் கலந்துகொண்டனர். அவருக்கு அர்ச்சகர்கள் எலுமிச்சம்பழம் மாலையை பிரசாதமாக வழங்கினர். பின்னர், சசிகலா அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in