

கரூர் மாவட்டம் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல் லூரியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள பாதுகாப்பு அறைக ளின் (ஸ்ட்ராங் ரூம்) பின்புறப் பகுதிகளில் கேமராக்கள் பொருத் தப்படவில்லை என புகார் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அலுவலர், கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சி யருமான பிரசாந்த் மு.வடநேரே ஆகியோருக்கு கரூர் தொகுதி திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ நேற்று அனுப்பியுள்ள புகார் மனு விவரம்:
கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய 4 தொகுதிகளில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள பாதுகாப்பு அறைகளின் பின்புறம் உள்ள பகுதிகளை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. மேலும் பாதுகாப்புக்கு காவலர்களும் இல்லை. இதனால் பின்புறம் வழியாக வெளியாட்கள் சென்று அங்குள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களை சேதப்படுத்த வாய்ப்புள்ளது.
பாதுகாப்பு அறைகளின் முன் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ஒரு சில கேமராக்கள் சரியாக இயங்கவில்லை. மேலும், கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களை மேலும் அதிகரித்து சுழற்சி முறையில் 3 கட்டமாக பணியமர்த்தி பாதுகாப்பை பலப் படுத்த வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.