

பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இன்று முதல் பாரம்பரிய உடைகளில் பணிக்கு செல்ல திருக்கோயில் பணியாளர்கள் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
அரைக்கால் ட்ரவுசர், ஜீன்ஸ், டீ-சர்ட், லெகிங்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து தமிழகத்தில் உள்ள பாரம்பரிய கோயில்களுக்குள் செல்ல ஜனவரி 1 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை வரவேற்கும் விதமாக கோயில் பணியாளர்கள் இன்று முதல் பாரம்பரிய உடைகளில் பணிக்குச் செல்ல முடிவெடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக திருக்கோயில் பணியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் வை.ஈஸ்வரன் கூறும்போது, “ கோயில்களில் பாரம்பரியமான ஆடைகளை அணிய வேண்டும் என்பதற்காக ஜீன்ஸ், லெகிங்ஸ் உள்ளிட்ட ஆடைகளுக்கு ஜனவரி 1 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொது மக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோயில் பணியாளர்களாகிய நாங்களே ஜனவரி 1-ம் தேதிக்கு முன்பா கவே பாரம்பரிய உடை அணிந்து கோயிலுக்கு செல்ல முடிவெடுத் துள்ளோம். அதன்படி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் ஊழியர்கள் 28-ம் தேதி யன்று வேஷ்டி, குர்தா உள்ளிட்ட ஆடைகளை அணிந்து பணிக்கு செல்லவுள்ளோம். தமிழகம் முழுவதும் உள்ள ஊழியர்களும் பாரம்பரிய ஆடைகள் அணிந்து பணிக்கு செல்ல முடிவெடுத்துள்ளனர்” என்றார்.