

சென்னை பெருமழையால் தவித்தபோது தனது தமிழ்நாடு வெதர்மேன் ('Tamilnaduweatherman') என்ற ஃபேஸ்புக் பக்கத்தின் வாயிலாக வானிலை முன்னறிவிப்புகளை அளித்துவந்த பிரதீப் ஜான் என்ற இளைஞரை திமுக தலைவர் கருணாநிதி பாராட்டியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியிடம், "இளைஞர் பிரதீப் ஜான், 'Tamilnaduweatherman' என்ற தனது "முகநூல்" பக்கத்தில் தமிழகத்தின் வானிலை பற்றி தெரிவிக்கும் செய்திகள் மக்களுக்குப் பெரிதும் உதவிகரமாக இருப்பதாகப் பேசப்படுகிறதே?" எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கருணாநிதி, "உண்மைதான்; தமிழகத்திலே எந்தப் பகுதியிலே எவ்வெப்போது கன மழை என்று இந்த இளைஞர் ஆராய்ந்து தெரிவிக்கும் முன்னறிவிப்புகள் உண்மையாகவும், உதவிகரமாகவும் இருப்பதாகப் பலரும் சொல்கிறார்கள். நானும் அந்த இளைஞருக்கு என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.