Published : 11 Apr 2021 03:15 AM
Last Updated : 11 Apr 2021 03:15 AM

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட கடற்கரைகளில் சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் மக்கள் செல்ல தடை

சென்னை

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அனைத்து கடற்கரைகளிலும் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூடுவது இன்று முதல் தடை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்புஅதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, நேற்று முதல் பல்வேறுகட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இந்நிலையில், இன்று முதல் கூடுதலாக சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும் சனி, ஞாயிறு மற்றும் அனைத்து விடுமுறை நாட்களிலும் மக்கள் கூடுவது இன்று (ஏப்.11) முதல் தடை செய்யப்பட்டுள்ளது.

புதிய தளர்வு

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் மக்கள் வழிபாடு செய்யஇரவு 8 மணிவரை அனுமதிக்கப்படும் என்ற கட்டுப்பாடு, தற்போதுசம்பந்தப்பட்ட வழிபாட்டுத்தலங்களின் வழக்கமான நேரம் வரையிலோ அல்லது அதிகபட்சம் இரவு10 மணி வரையிலோ வழிபாட்டுக்காக நிலையான வழிகாட்டு முறைகளைப் பின்பற்றி அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதியில்லை.

இந்த காலகட்டத்தில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்கள், முதல் 7 நாட்களுக்கு மட்டும் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட காட்சிகளை விட கூடுதலாக ஒரு காட்சிக்குஅனுமதிக்கப்படுகிறது. அனைத்துகாட்சிகளிலும் 50% இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x