

பண்ருட்டி எம்எல்ஏ சத்யா, அவரது கணவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 6 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர் அறிவிப்பின் போது, தற்போதுள்ள எம்எல்ஏக் கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலருக்கு இம்முறை வாய்ப்பு அளிக்கப்படவில்லை. குறிப்பாக அமமுகவுக்கு சென்று வந்த வர்கள், தலைமைக்கு எதிராக செயல்பட்டவர்கள் என பலர் ஓரங்கட்டப்பட்டனர். இவர்களில் பலர் அமமுகவுக்கும், திமுகவுக் கும் சென்றனர்.
அந்த வகையில் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன், சேந்தமங் கலம் எம்எல்ஏ, பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட பலரை கட்சியில் இருந்துஅதிமுக தலைமை நீக்கியுள்ளது.
அந்த வரிசையில் தற்போது அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளரும், எம்எல்ஏவுமான சத்யா பன்னீர்செல்வம், பண்ருட்டி நகர முன்னாள் தலைவர் பி.பன்னீர்செல்வம், பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.பெருமாள், அண்ணாகிராமம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மார்ட்டின் லூயிஸ், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் டி.சவுந்தர், வீரபெருமாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.ராம்குமார் ஆகியோர், சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்தும், எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாகவும் தேர்தல் பணியாற்றிய காரணத்தால் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக ஒருங் கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் அறிவித் துள்ளனர்.
இதில், பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வதத்திற்கு மீண்டும் இம்முறை வாய்ப்புஅளிக்காததால் அவரும், அவரதுகணவர் பன்னீர்செல்வமும் அரசி யலை விட்டே விலகப்போவதாக அறிவித்திருந்தனர் என்பது குறிப் பிடத்தக்கது.