Published : 11 Apr 2021 03:16 AM
Last Updated : 11 Apr 2021 03:16 AM

சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டதால் கள்ளழகர் ஆடை தயாரிக்கும் கலைஞர்கள் பாதிப்பு

மதுரை புதுமண்டபத்தில் சித்திரைத் திருவிழாவுக்காக கள்ளழகர் உடை தயாரித்த தையல் கலைஞர். படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

சித்திரைத் திருவிழா ரத்து செய்யப் பட்டதால் மதுரை புதுமண்டபத்தில் கள்ளழகர் ஆடைகள், திருவிழா அலங்காரப் பொருட்கள் தயாரிக் கும் தையல் கலைஞர்கள் பாதிக் கப்பட்டுள்ளனர்.

மதுரை சித்திரைத் திருவிழா கொண் டாட்டத்தில் மீனாட்சியம்மன் கோயில் அருகே இருக்கும் 380 ஆண்டுகள் பழமையான புதுமண்டபம் முக்கிய பங்கு வகிக்கிறது. அங்கு தையல் கடை கள்தான் பிரதானம். சித்திரைத் திருவிழாவுக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்களை புது மண்டபத்தில் உள்ள தையல் கலை ஞர்கள் கலைநயத்துடன் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.

சித்திரைத் திருவிழாவில் பங் கேற்கும் பக்தர்கள் அழகர் வேட த்தில் சல்லடம் ஆடை அணிந்து, கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது தண்ணீரைப் பீச்சியடிப்பார்கள். சல்லடம் ஆடைகள், உருமா, தண்ணீர் பீச்சியடிக்கும் பைகள், தீப்பந்தம் ஆகியவை புதுமண்டபம் தையல் கடைகளில்தான் தயாரிக் கப்படுகின்றன.

இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவுக்காக நேற்று முன் தினம் வரை கள்ளழகர் சல்லடம் ஆடைகள், ட்ரவுசர், தண்ணீர் பீச்சியடிக்கும் பைகள், சாட்டை, அலங்காரப் பொருட்கள் தயாரிக் கும் பணியில் புதுமண்டபம் தையல் கலைஞர்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டனர்.

ஆனால் கரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் சித்திரைத் திருவிழா கோயில் வளாகத்தில் நடத்தப்படும். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ரத்து செய்யப் படுகிறது என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

150 தையல் கலைஞர்கள்

கடந்த ஆண்டும் இதேபோல் சித்திரைத் திருவிழா ரத்தானது. தற்போதும் ரத்து செய்யப்பட்டுள் ளதால் புதுமண்டபத்தில் சித்திரைத் திருவிழா பொருட்களைத் தயாரித்து வந்த 150 தையல் கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அங்குள்ள தையல் கலைஞர் ராஜகோபால் கூறியதாவது:

68 ஆண்டுகளாக மூன்று தலைமுறையாக இங்கு கடை வைத்திருக்கிறோம். எனக்கு விவரம் தெரிந்து கடந்த ஆண்டும், இந்த ஆண்டும்தான் திருவிழா நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் தயாரித்து வைத்த கள்ளழகர் ஆடைகள் வீணாகி நஷ்டமடைந்தோம்.

சித்திரைத் திருவிழா நேரத் தில்தான் எங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். மற்ற நேரங்களில் பள்ளிச் சீரு டைகள் தைப்பது, கிராமியக் கலை ஞர்கள், உள்ளூர் கோயில் திரு விழாக்களுக்குத் தேவையான ஆடைகள், அலங்காரப் பொருட் களை தயாரித்துக் கொடுக்கிறோம்.

கடந்த ஒரு ஆண்டாக கரோனா தொற்று காரணமாக அந்த ஆர்டர் எதுவும் வரவில்லை. பள்ளிகள் திறக்கப்படாததால் சீருடைகள் தயாரிப்பு ஆர்டர் முழுவதுமாக வரவில்லை. கடந்த சில மாத மாகத்தான் உள்ளூர் திருவிழா ஆர்டர்கள் வர ஆரம்பித்தன. சித்திரைத் திருவிழா வியாபாரத்தை பெரிதும் எதிர்பார்த்தோம்.

அதற்காகக் கடன் வாங்கிப் பொருட்கள் வாங்கி வைத்துள் ளோம். தற்போது திருவிழா ரத் தானதால் மூலப்பொருட்களை என்ன செய்வது என்று தெரிய வில்லை. ஏற்கெனவே கோயில் தீ விபத்தால் 2 ஆண்டுகளுக்கு முன் நீண்ட நாட்கள் புதுமண்டபம் மூடப்பட்டதால் கஷ்டப்பட்டோம்.

சித்திரைத் திருவிழாவிலாவது வருவாய் கிடைக்கும் என நினைத்தோம். தற்போது திரு விழா ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x