கரோனா இரண்டாவது அலை பரவல்: காரியாபட்டியில் முகக்கவசம் தயாரிக்கும் பணி விறுவிறுப்பு

காரியாபட்டியில் முகக்கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.
காரியாபட்டியில் முகக்கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.
Updated on
1 min read

கரோனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் முகக் கவசங்கள் தயாரிக்கும் பணி மீண்டும் விறுவிறுப்பு அடைந் துள்ளது.

சீனாவில் கடந்த ஓராண்டுக்கு முன் பரவிய கரோனா வைரஸ், பல்வேறு நாடுகளில் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரு கிறது. இந்தியாவில் 2020-ல் கரோனாவின் தாக்கம் தீவிரமாக இருந்த நிலையில், படிப்படியாக குறைந்து 2021 ஜனவரி முதல் அதன் தாக்கம் குறைந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் கரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. நோய் தொற்று அறிகுறி உள்ளோரைக் கண்டறிந்து அவர்களுக்கு மருத் துவமனைகளில் சிறப்பு கிசிச்சை அளிக்கப்படுகிறது.

பொது இடங்களில் மற்றவர் களுக்கு கரோனா வைரஸ் எளிதாக பரவுவதைத் தடுக்கும் வகையில் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக் கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இத னால் முகக் கவசங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதை யடுத்து விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் முகக் கவசங்கள் தயாரிக்கும் பணி மீண்டும் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

இதுகுறித்து காரியாபட்டியில் தையல் கூடம் நடத்தி வரும் முருகன் கூறியதாவது:

முகக் கவசங்கள் தயாரிப் பதற்கான மூலப் பொருட்களை மதுரை, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்கிறோம். கடந்த ஆண்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் முலம் முகக்கவசங்களை சீனா, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தோம்.

தற்போது உள்நாட்டிலேயே தேவை அதிகரித்து, அதிக ஆர் டர்கள் குவிந்துள்ளன. அரசு துறை களுக்கும், காவல்துறைக்கும் முகக் கவசங்கள் தயாரித்து வழங்குகிறோம். அதோடு, ஊராட் சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு வழங்கு வதற்காக ஊராட்சி நிர்வாகங்களும் ஆர்டர்கள் கொடுத்துள்ளன. மருத் துவமனைகளும் அதிக அளவில் முகக் கவசங்களை கொள்முதல் செய்கின்றன.

நாளொன்றுக்கு 5 ஆயிரம் முகக் கவசங்களை தயாரிக்கிறோம். இங்கு தயாரிக்கப்படும் முகக் கவசங்கள் 3 அடுக்குகளை கொண்டவையாகும். பல்வேறு வகையான முகக்கவசங்களை தயாரிக்கிறோம். குறைந்தபட்சம் ரூ.4 முதல் அதிகபட்சமாக ரூ.20 வரை விலை வைத்து முகக் கவசங்களை விற்பனை செய்கி றோம் என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in