Published : 11 Apr 2021 03:16 am

Updated : 11 Apr 2021 10:44 am

 

Published : 11 Apr 2021 03:16 AM
Last Updated : 11 Apr 2021 10:44 AM

கரோனா 2-வது அலையின் தாக்கத்தால் வெறிச்சோடிய ராமேசுவரம், தனுஷ்கோடி

corona-second-wave
வெறிச்சோடிக் காணப்படும் தனுஷ்கோடி தேவாலயம் பகுதி

ராமேசுவரம்

கரோனா 2-வது அலையின் தாக்கம் காரணமாக ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஏப்ரல் 30, 2021 வரை பல்வேறு தளர்வுகளுடன் நீடித்து வருகிறது.


கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில், தனுஷ்கோடி கடற்கரை பகுதிகளுக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல கடந்த 2020 ஆண்டு மார்ச் 23-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.

274 நாட்களுக்குப் பிறகு தனுஷ்கோடி கடற்கரைக்குச் செல்லவும், 315 நாட்களுக்குப் பின்னர் ராமநாதசுவாமி கோயில் தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடவும் தமிழக அரசு அனுமதி வழங்கியது.

தற்போது நாடு முழுவதும் கரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வாரமாக கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. சராசரி யாக தமிழகம் முழுவதும் தினமும் 2500-க்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண் ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரை, ராமநாதசுவாமி கோயில் நான்கு ரத வீதிகள், கோயில் பிரகாரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

மேலும் சுற்றுலாத் தலமான தனுஷ்கோடி கடற்கரைப் பகுதியிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து விட்டது. இதனால் தனுஷ்கோடி, அரிச்சல்முனை கடற்கரை பகுதிகளிலும் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி உள்ளது.


கரோனா 2-வது அலைCorona second waveராமேசுவரம்தனுஷ்கோடிCorona

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x