Published : 11 Apr 2021 03:17 AM
Last Updated : 11 Apr 2021 03:17 AM

பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தோட்டக்கலை பண்ணையில் நல்ல பாம்பு வளர்ப்பு

நல்ல பாம்புடன் ராஜேந்திரன்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம் தாதனேந்தல் ஊராட்சியில் உள்ள தோட்டக்கலை பண்ணையில் விவசாயிகளின் நண்பன் பாம்பு என மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நல்ல பாம்பு வளர்க்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமையான சூழலை அதிகரித்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் 1000 குறுங்காடுகள் அமைத்திட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

குறுங்காடுகளில் பாரம்பரிய வகை களான நாட்டுப் பூவரசு, நாட்டு வாகை, புங்கன், ஆவி, வேம்பு, நாவல், புளி போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

மேலும் ஊராட்சிகளின் வருவாயைப் பெருக்கும் வகையில் ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 20-க்கும் மேற்பட்ட தோட்டக்கலைப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்புல்லாணி ஒன்றியம் தாதனேந்தல் ஊராட்சியில் கிழக்கு கடற்கரை சாலையில் குறுங்காடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் எதிரே 3 ஏக்கரில் தோட்டக்கலைப் பண்ணை அமைக்கப்பட்டு கொய்யா, மாதுளை, சீத்தா, நெல்லி போன்ற மரங்களும், காய்கறி, கீரைச் செடிகளும் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இங்குள்ள தோட்டக்கலைப் பண்ணை யில் நல்ல பாம்பு ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குட்டி நல்ல பாம்பை வளர்த்து வருகிறார் ஊராட்சித் தலைவர் கோகிலா ராஜேந்திரன். இவரது கணவர் ராஜேந்திரன் பல் வேறு சமூக விழிப்புணர்வு நிகழ்வு களில் கலந்துகொண்டு நடித்தவர் என் பதும், திரைப்பட நடிகர் என்பதும் குறிப் பிடத்தக்கது.

இதுகுறித்து ராஜேந்திரன் கூறிய தாவது:

தாதனேந்தல் ஊராட்சியில் தொடங்கப் பட்ட குறுங்காடு, தோட்டக்கலை பண்ணை மிகச்சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இரண்டு அடி நீளமுள்ள குட்டி நல்ல பாம்பு ஒன் றும் வளர்க்கப்பட்டு வருகிறது. பாம்பு விவசாயிகளின் நண்பன் என பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே பாம்பு வளர்க்கப்படுகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x