

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக் கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் நளினி தன்னை முன்கூட் டியே விடுதலை செய்ய உத்தர விடக் கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள் ளார். அவரது மனுவுக்குப் பதில் அளிக் கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இதுகுறித்து உயர் நீதிமன்றத் தில் நளினி தாக்கல் செய்த மனு விவரம்:
ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்று, கடந்த 24 ஆண்டுகளாக வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறேன். 2000-ம் ஆண்டு முதல் இதுவரை 2,200 ஆயுள் தண்டனை கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர, 20 ஆண்டுகள் தண் டனை அனுபவித்த ஆயுள் தண் டனை கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய லாம் என்று தமிழக அரசு 1994-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து பல ஆயுள்தண் டனை கைதிகள் பலனடைந்தனர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவிக் கும் எனக்கு இந்த அரசாணை யின்படி விடுதலை பெற தகுதி உள்ளது.
அதுகுறித்து 2014-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி தமிழக உள் துறை முதன்மைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பினேன்.
இதுவரை அம்மனு பரிசீலிக் கப்படவில்லை. இம்மனுவை பரிசீலிக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவுக்குப் பதில் அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இவ்வழக்கு விசாரணையை அடுத்த மாதம் முதல் வாரத்துக்கு தள்ளிவைத் தார்.