

கடும் மழை காரணமாக காஞ்சி புரம் மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த சாலைகளை தற்காலிக சீரமைப்பு பணிகள் செய்து போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதனால் ஓட்டுநர், நடத்துநர்கள் விடுமுறை மறுக்கப்பட்டு இரவு, பகலாக பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
போக்குவரத்து தொழிலாளர்கள் தங்குவதற்காக அனைத்து அரசு போக்குவரத்து பணிமனைகளிலும், உடைகள் வைக்கும் பாதுகாப்பு பெட்டக வசதிகளுடன் தங்குமிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஓட்டுநர் களும் நடத்துநர்களும் பணி முடிந்து இரவு நேரங்களில் தூங்குவதற்காக இதை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தங்குமிடங்கள் கனமழையினால் தண்ணீர் புகுந்ததால் கடுமையாக சேத மடைந்துள்ளன. இதனால், தொழிலாளர்கள் இதில் தங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தொழிலாளர்கள் தங்குவற்காக மாற்று இடம் ஏதும் உயர் அதிகாரிகள் ஏற்படுத்தாததால் தொழிலா ளர்கள் தூங்க முடியாமல் அவதி பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கூறியதாவது: பேருந்துகளை இயக்கும் எங்க ளுக்கு ஓய்வு என்பது மிக முக்கிய மானது. வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்கள், தங்களின் சொந்த ஊர்க ளுக்கு செல்ல வேண்டும் என்பதற் காக சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறோம். குடும்பங்களை மறந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது தங்குமிடங்கள் சேதமடைந்துள்ளதால், பேருந்தில் தூங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் மாற்று இடங்கள் ஏற்பாடு செய்யாததால் கடுமை யான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்யோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, போக்குவரத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: பெரும்பாலான சிறப்பு பேருந்துகள் வெளியூர்களுக்கு உடனடியாக திரும்பி வருகிறது. மேலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் கோட்ட பேருந்துகளை இயக்கி சென்னை கோயம்பேடு செல்லும் ஓட்டுநர்கள் தங்க இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும், தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளின் ஓட்டுநர்கள் தங்குவதில் சிறிது சிரமம் உள்ளது. அவர்களுக்கான இடவசதிகள் ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன.