

கடந்த ஆண்டில் கரோனா பரவல் தொடங்கியபோது, முழுமையாக மாவட்டங்களுக்கிடையே வாகனப் போக்குவரத்து தடுக்கப்பட்டு, இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின், இ-பாஸ் முறை நிறுத்தப்பட்டு தற்போது இ-பதிவு முறை செயல் படுத்தப்படுகிறது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள்படி, தமிழகத்தில் மாவட் டங்களுக்கு இடையிலான போக்கு வரத்தில் எவ்வித கட்டுப்பாடும் இல்லை. ஆனால், பேருந்துகளில் அமர்ந்து பயணிக்க மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவர். நின்று பயணிக்க அனுமதி கிடையாது.
புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பதிவு தேவையில்லை. கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு இ-பதிவு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள், ‘https://eregister.tnega.org’ என்ற இணையதளம் மூலம் தங்கள் விவரங்களை பதிவு செய்து, இ-பதிவு ஆவணத்தை பெற்று பயணிக்கலாம்.