வாக்கு எண்ணும் மையங்களை விழிப்புடன் கண்காணிப்போம்: விஜயகாந்த் வேண்டுகோள்

வாக்கு எண்ணும் மையங்களை விழிப்புடன் கண்காணிப்போம்: விஜயகாந்த் வேண்டுகோள்
Updated on
1 min read

வாக்கு எண்ணும் மையங்களில் எந்த தவறும் நடக்காமல் இருக்க கட்சித் தொண்டர்கள் இரவு பகல் பாராமல் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சட்டப்பேரவைத் தேர்தலில் மிகச் சிறந்த முறையில் பணியாற்றிய தேமுதிகவினர், கூட்டணி கட்சியினர், வேட்பாளர்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆட்சி பலம், பண பலம், அதிகார பலத்தை தைரியத்துடன் எதிர்கொண்டு, தமிழகத்தின் எதிர்கால நலனை குறிக்கோளாக கொண்டு அரும்பாடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

வாக்குகள் எண்ணும் மையங்களில் எந்த தவறும் நடைபெறாமல் இருக்க கட்சித் தொண்டர்கள் இரவு பகல் பாராமல் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ம் தேதியும் எந்தவிதமான அதிகார துஷ்பிரயோகமும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மே 2-ம் தேதி நல்ல தீர்ப்பு வரும் என்றுநம்புவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in