

மதுரையில் 20-க்கும் மேற்பட்ட போக்குவரத்து சிக்னல்கள் செயல் படுகின்றன. இவற்றில் காளவாசல், சிம்மக்கல், பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையம், மேலமடை உள்ளிட்ட சிக்னல்களில் காலை, மாலை நேரங்களில் வாகன நெரிசல் தவிர்க்க முடியா ததாகிவிட்டது.
மேலமடை சிக்னலில் அண்மைக் காலமாகப் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. குறிப்பாக சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் கார் உள்ளிட்ட வாகனங்கள் பாண்டி கோயில் சிக்னல் வழியாக ரிங் ரோட்டை சென்றடைய வேண்டும். இதனால் இந்த சிக்னலில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
மேலும் அப்போலோ மருத்துவமனைக்குச் செல்லும் ஆம்புலன்ஸ்கள், மேலமடை சாலைக்குச் செல்லும் பிற வாக னங்கள் ஆவின் சிக்னலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.
எனவே முதல் கட்டமாக ஆவின் சிக்னலில் இருந்து இடதுபுறமாகத் திரும்பி கேகே. நகர் சாலைக்குச் செல்வதற்கு வசதியாக (ஃபிரீலெப்ட்) இரும்புத் தடுப்பு வேலி அமைக் கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்போலோ மருத்துவமனை மற் றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பிற வாகனங்கள் நிற்காமல் செல் கின்றன.
போதிய இடம் இருந்தும் அண்ணா நகரில் இருந்து இடதுபுறமாகத் திரும்பி ஆவின் சாலைக்கு செல்ல இடையூறாக உள்ளது. சிக்னலில் நிற்பவர்கள் வழிவிடாமல் வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். மேலும் அவ் விடத்தின் நடுவில் சிலை இருப்பதால் வாகனங்கள் தனித்தனியே நிற்கின்றன.
இதைப் பணியில் இருக்கும் போலீஸார் கண்காணிக்க வேண்டும். ஆவின் சாலைக்கு செல்வோருக்கு வழிவிடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சிக்னலைத் தொடர்ந்து பிற சிக்னலிலும் இடதுபுறம் செல்லும் வாகனங்கள் நிற்காமல் செல்ல தனி வழியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை நகர் போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.