

திருச்சி திருவெறும்பூரில் உள்ள எறும்பீஸ்வரர் கோயில் தெப்பக் குளத்தின் சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள அலங்கார மின் விளக்கு தூண்கள் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளதை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயிலுக்கு எதிரே தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்தின் மேற்கு கரையில் கோயிலுக்கும், அதைத் தொடர்ந்துள்ள தெருக்களுக்கும் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை ஓரத்தில் குளத்தின் சுற்றுச்சுவர் உள்ளது.
இந்த சுற்றுச்சுவரை ஒட்டி அழகுக்காக அமைக்கப்பட்டுள்ள மின்விளக்கு சிமென்ட் தூண் களில் சில சிதிலமடைந்து காணப்படுகின்றன. இதில் ஒரு தூண் கடந்த சில நாட்களுக்கு முன் னர் சாய்ந்து கீழே விழுந்து விட் டது. மேலும், சுற்றுச்சுவருக்கும், சாலைக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் சிலாபு கள் சில இடங்களில் உள்வாங்கியும், உடைந்தும், கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டும் உள்ளன. இவற்றை விரைந்து சீர மைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலரும், பன்னிருதிருமுறை வார வழிபாட்டு மன்ற ஆலோசகருமான கோ.சண் முகவேல் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:
வரலாற்று சிறப்புமிக்க இந்தக் கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமானோர் தரிசனத்துக்கு வரு கின்றனர். மேலும், பிரதோஷம் உள்ளிட்ட நாட்களில் ஆயிரக்கணக் கானோர் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே தெப்பக்குளத்தில் உள்ள மின் விளக்கு தூண்கள் மற்றும் அதற்கு கீழே உள்ள தளம் ஆகியவை சேதமடைந்து வருகின்றன. இதில் உள்ள மின் விளக்குகளும் சரிவர எரிவதில்லை. இந்த பகுதியில் உள்ள குழந்தைகள் இங்கு தான் விளையாடுகின்றனர். எனவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக இவற்றை சரி செய்ய வேண்டும்.
மின்விளக்குகளையும் சீர மைத்து தொடர்ந்து எரிய விடு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றார்.