Published : 09 Apr 2021 05:53 PM
Last Updated : 09 Apr 2021 05:53 PM

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர் உதயகுமார்; கரோனா பணிக்காக முதல்வரைப் பிரதமர் பாராட்டியதாகப் பெருமிதம்

கோப்புப்படம்

மதுரை

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி மையத்தில் முதல் கட்டக் கரோனா தடுப்பூசியைச் செலுத்தி கொண்டார். அவருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:

"கரோனா முதல் அலையில் மக்கள் ஒத்துழைப்போடு முதல்வர் போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களைப் பாதுகாத்தார். அதைத் தொடர்ந்து நமது பிரதமர், நோய்த் தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் திகழ்கிறது என்று நமது முதல்வரைப் பாராட்டினார்.

அதுமட்டுமல்லாது இந்தியா முழுவதும் முதன்முதலாக பாரதப் பிரதமர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை அறிமுகப்படுத்தித் தொடங்கி வைத்தபோது, தமிழகத்தில் இதே அரசு ராஜாஜி மருத்துவமனையில், நமது முதல்வர் தொடங்கி வைத்தார்.

கரோனா முதல் அலையில் தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டு கரோனா பரவலைத் தடுத்தது. தற்போது 2-ம் ஆலை வந்துள்ளது. இதிலிருந்து மக்களைக் காக்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காகப் பொதுமக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அவசரத் தேவை என்று வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மதுரை மாவட்டத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் 25,046 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 1,39,525 பேரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்."

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அரசு ராஜாஜி மருத்துவமனை வாசலில் தடுப்பூசி போட வந்த வயதான ஒருவர் நடக்க முடியாமல் சிரமப்பட்டபோது உடனடியாக மருத்துவமனை அதிகாரியை அணுகி சக்கர நாற்காலியைக் கொண்டு வரச்செய்து, அதன் மூலம் முதியவரைத் தடுப்பூசி மையத்திற்கு அனுப்பி வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x