Last Updated : 09 Apr, 2021 01:49 PM

 

Published : 09 Apr 2021 01:49 PM
Last Updated : 09 Apr 2021 01:49 PM

காரைக்கால் மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள் கரோனா தடுப்பு முறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், கண்டிப்பாக கரோனா பரவல் தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்தும் வரும் சூழலில், அதனை தடுப்பதற்கான பல்வேறு நடைமுறைகளை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, மண்டல காவல் காவல் கண்காணிப்பாளர் கே.எல்.வீரவல்லபன் தலைமையில், காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் நிர்வாகிகள், நேரு மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், காரைக்கால் ரெஸ்டாரன்ட் அசோசியேஷன் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஏப்.8) மாலை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும், தனி மனித இடைவெளியை பின்பற்றுவது, சானிட்டைசர் மூலம் கைகளை சுத்தம் செய்வது, முகக்கவசம் அணிவது போன்ற கரோனா பரவல் தடுப்பு முறைகளை அனைத்து வணிக நிறுவனங்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்.

மேலும், இன்று(ஏப்.9) திருமலைராயன்பட்டினம் வணிகர் சங்க நிர்வாகிகள், பேருந்து உரிமையாளர்கள் உள்ளிட்டோருடன் தனித்தனியே ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, ”வணிகர் சங்க நிர்வாகிகள் அனைத்து வணிகர்களிடமும் கரோனா தடுப்பு முறைகளை பின்பற்றச் சொல்லி எடுத்துக் கூற வேண்டும், முகக் கவசம் அணியாமல் வருவோரை கடைகளுக்குள் அனுமதிக்கக் கூடாது, தனி மனித இடைவெளியை பின்பற்றுவதற்கான குறியீடுகள், அமைப்புகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும், வணிக நிறுவனங்களை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு தூய்மைப் படுத்த வேண்டும், பேருந்துகளில் நின்றுகொண்டு செல்லும் வகையில் பயணிகளை ஏற்றக் கூடாது, அடிக்கடி பேருந்துகளை தூய்மைப்படுத்த வேண்டும் என்றும், விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும்" காவல் கண்காணிப்பாளர் வீரவல்லபன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x