திண்டுக்கல் அருகே மீன்பிடி திருவிழா: குளத்தில் ஆர்வத்துடன் மீன் பிடித்த கிராம மக்கள்

திண்டுக்கல் அருகே புகையிலைப்பட்டியிலுள்ள குளத்தில் நடந்த மீன்பிடித் திருவிழாவில் ஆர்வமுடன் மீன்பிடித்த கிராம மக்கள்.
திண்டுக்கல் அருகே புகையிலைப்பட்டியிலுள்ள குளத்தில் நடந்த மீன்பிடித் திருவிழாவில் ஆர்வமுடன் மீன்பிடித்த கிராம மக்கள்.
Updated on
1 min read

திண்டுக்கல் அருகே புகையிலைப்பட்டி கிராமத்தில் நடந்த மீன்பிடித் திருவிழாவில் கிராம மக்கள் ஆர்வமுடன் மீன்பிடித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், புகையிலைப்பட்டி கிராமத்தில் உள்ள வலைப்பிடிச்சான்குளத்தில் நீர் நிரம்பும் ஆண்டுகளில் மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இப்பகுதியில் போதிய மழை பெய்ததால் குளத்தில் நீர் நிரம்பியது.

இதில் மீன் குஞ்சுகள் விடப்பட்டு வளர்க்கப்பட்டன. தற்போது கோடை காலத்தால் குளத்திலிருந்த தண்ணீர் வற்றத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, இக்குளத்தில் கிராம மக்கள் நேற்று மீன் பிடித் திருவிழாவை நடத்தினர். தண் ணீர் குறைவாக இருந்ததால் சிறி யவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் குளத்தில் இறங்கி மீன் பிடித்தனர். அயிரை, விரால், கட்லா, ரோகு உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் சிக்கின. அனைவருக்கும் தேவையான மீன்கள் கிடைத்ததால், புகையிலைப்பட்டி கிராமம் முழுவதும் நேற்று மீன் குழம்பு மணம்பரவியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in