

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக வேலூர் மத்திய சிறையில், சாட்சி கள் முன்பு யுவராஜுக்கு நேற்று அடையாள அணிவகுப்பு நடந்தது.
சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீஸாரால் தேடப்பட்ட தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரண டைந்தார். பின்னர், அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.
இந்நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக வேலூர் சிறையில் நேற்று அடை யாள அணிவகுப்பு நடந்தது. இதற் காக வழக்கின் முக்கிய சாட்சியான கல்லூரி மாணவி சுவாதியை சிபிசிஐடி ஏடிஎஸ்பி ஸ்டாலின், டிஎஸ்பி வேலன் தலைமையிலான போலீஸார் பலத்த பாதுகாப்புடன் வேலூருக்கு நேற்று அழைத்து வந்தனர்.
யுவராஜ் உட்பட 4 பேர்
சிறையில் நாமக்கல் மாஜிஸ்தி ரேட் ராஜேஷ் கண்ணா முன்னிலை யில் நேற்று பகல் 1 மணிக்குத் தொடங்கி 1.45 மணி வரை அடை யாள அணிவகுப்பு நடந்தது. அப்போது, சிபிசிஐடி போலீஸாரை அங்கு அனுமதிக்கவில்லை. இந்த அடையாள அணிவகுப்பின்போது யுவராஜ் மற்றும் அவருடன் 4 கைதிகள் நிறுத்தப்பட்டனர். அவருடன் மற்ற கைதிகள் 3 முறை மாற்றி மாற்றி நிறுத்தப்பட்டு அடையாள அணிவகுப்பு நடந்ததாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.