தென்காசி எம்.பி.யை காணவில்லை என்று முகநூலில் பதிவிட்டவரை சந்தித்து அதிர்ச்சியளித்த எம்பி.

தென்காசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரை காணவில்லை என்று முகநூலில் பதிவிட்ட நபரை  நேரில் சந்தித்து அத்தொகுதி எம்.பி. தனுஷ்குமார் இனிப்பு வழங்கினார்.
தென்காசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரை காணவில்லை என்று முகநூலில் பதிவிட்ட நபரை நேரில் சந்தித்து அத்தொகுதி எம்.பி. தனுஷ்குமார் இனிப்பு வழங்கினார்.
Updated on
1 min read

கடையநல்லூர் அருகே நயினாரகரம் கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவர், ‘‘தென்காசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரை காணவில்லை, யாராவது கண்டால் எங்கள் கிராமத்துக்கு வரச்சொல்லுங்க” என்று முகநூலில் பதிவிட்டிருந் தார். இதை பார்த்த நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார் அந்த கிராமத்துக்கு சென்று அந்த இளைஞரை நேரில் சந்தித்து இனிப்பு வழங்கினார். அப்போது அந்த இளைஞர், ‘‘எங்கள் ஊருக்கு பொது கழிவறையும் பேருந்து நிழற்குடையும் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். அதை இது வரை நீங்கள் செய்யாததால் இவ்வாறு பதிவிட்டேன் என்று கூறினார்.

இதை கேட்ட தனுஷ் குமார், ‘‘ கோரிக்கையை நிறை வேற்ற தயாராக உள்ளேன். கரோனா காரணமாக தொகுதி மேம் பாட்டு நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளதால் தொகுதி முழுவதும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. நிதி வந்ததும் உங்கள் ஊருக்கு பொது கழிப்பிடமும், பேருந்து நிழற்குடை யும் அமைத்து தருவேன்’ என வாக்குறுதி அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in