

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பினராயி விஜயன் விரைவில் குணம்பெற திமுக தலைவர் ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகி இருப்பது அறிந்து வருத்தமுற்றேன். அவர் விரைந்து நலம் பெற விழைகிறேன். பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளோர் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
;
கேரளாவில் கரோனா 2-வது அலை பாதி்ப்பு இன்னும் குறையவில்லை. நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் குறைவில்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய அரசின் அறிக்கையின்படி, கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் முதல் 5 மாநிலங்களில் கேரளா 2-வது இடத்தில் இருக்கிறது.
இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். பினராயி விஜயன் ஏற்கெனவே முதல் டோஸ் செலுத்திக் கொண்ட நிலையில் தொற்று ஏற்பட்டுள்ளது.