Last Updated : 08 Apr, 2021 05:57 PM

 

Published : 08 Apr 2021 05:57 PM
Last Updated : 08 Apr 2021 05:57 PM

புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதனுக்கு கரோனா; ஜிப்மரில் அனுமதி

புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் கரோனாவால் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 9 தொகுதிகளில் போட்டியிட்டது. தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்து, வாக்குப்பதிவு முடிவடைந்த சூழலில், பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, பரிசோதித்ததில் அவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, இன்று (ஏப். 08) ஜிப்மரில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சாமிநாதன் லாஸ்பேட் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மண்ணாடிப்பட்டு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் ஏற்கெனவே உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x