

கொப்பரைத் தேங்காய் கொள் முதல் குறைக்கப்பட்டதால் சந் தைக்கு அதிகளவில் தேங்காய் வரத்து ஏற்பட்டு அவற்றின் விலை காய் ஒன்றுக்கு ரூ.5 வரை குறைந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மஞ்சளாறு, மருதா நதி அணை பாசன பகுதிகளான வத்தல குண்டு, தும்மலப்பட்டி, அய்யம் பாளையம், ஆத்தூர், கன்னிவாடி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத் துக்கும் மேற்பட்ட ஏக்கர்களில் தென்னை மரங்கள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் தேங்காய் களின் ஒரு பகுதி மும்பை, புதுடெல்லி உள்ளிட்ட வடமாநில பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப் படுகிறது. கூடுதலாக உள்ள காய் கள் கொப்பரைத் தேங்காய்களாக மாற்றி விற்பனை செய்யப்படு கிறது.
முன்பு கொப்பரைத் தேங்காய் ஒரு கிலோ ரூ. 72-க்கு கொள் முதல் செய்யப்பட்டது. தற்போது மழைக் காலம் என்பதால் தேங்காய்களை காயவைத்து பக்குவப்படுத்துவது சிரமம். இதனால், கொப்பரை கொள் முதலை தனியார் நிறுவனங்கள் குறைத்துக் கொண்டுள்ளன. இதனால் தற்போது ரூ. 65-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. கொப்பரை விலை குறைந்ததால் தேங்காய்களை அதிகளவு விவ சாயிகள் சந்தைக்குக் கொண்டு வரத் தொடங்கினர். இதனால் ரூ.15-க்கு விற்ற பெரிய அளவு காய் ரூ.5 குறைந்து ரூ.10-க்கு விற்றது. இதுகுறித்து வத்தல குண்டு வியாபாரி தர்மலிங்கம் கூறியதாவது:
வழக்கமாக 100 தேங்காய் ரூ.800 முதல் ரூ.1500 வரை விற் பனையாகும். கொப்பரை கொள் முதல் குறைவால், சந்தைக்கு அதிக வரத்து ஏற்பட்டுள்ளது. நேற்று 100 தேங்காய் ரூ.500 முதல் ரூ.1000 வரைதான் விற் பனையானது. கொப்பரை கொள் முதல் விலை அதிகரித்தால்தான் சந்தைக்கு வரத்து குறையும். மழைக் காலம் முடியும் வரை கொப்பரைக்கு விலை கிடைக் காது. எனவே வரத்து அதிகரிப் பால் தேங்காய் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றார்.