

அறிவியல்பூர்வமான இந்து சமயம் என்ற புத்தகத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்ரமணியன் வெளியிட்டார்.
“அறிவியல்பூர்வமான இந்து சமயம்” புத்தகம் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. ஆர்பிட்ரேஷன் மீடியே சன் கவுன்சில் (சென்னை) நிறுவனத் தலைவர் ஏ.முரளீதரன் வரவேற்புரையாற்றினார். தமிழக தொழில் மற்றும் வர்த்தக சபையின் தலைவர் சோழ நாச்சியார் ராஜசேகர் தொடக்க உரையாற்றினார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்ரமணியன் புத்தகத்தை வெளியிட, தமிழக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் எஸ்.கோபால கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். இந்த புத்தகம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிதியுதவிக்கு தெரிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் புத்தகத்தின் ஆசிரியர் என்.பி.ஏ.ரவி, சென்னை திருமலை திருப்பதி தேவஸ்தானத் தின் தலைவர் கே.அனந்தகுமார் ரெட்டி, சென்னை பல்கலைக் கழகத்தின் வைஷ்ணவிசம் துறையின் முன்னாள் தலைவர் எம்.ஏ.வேங்கடகிருஷ்ணன், சிதம்பரம் தில்லை நடராஜர் சன்னதி பொது தீட்சதர் முன்னாள் பொதுச்செயலாளர் ஆர்.பாஸ்கர தீட்சதர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.