

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது.
இதில் டிஜிபி ஜே.கே.திரிபாதி,நிதித்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் க.பணீந்திர ரெட்டி, தொழில் துறை செயலர் நா.முருகானந்தம், பொதுப்பணித் துறை செயலர் க.மணிவாசன், பொதுத்துறை செயலர் பி.செந்தில்குமார், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநர் பி.உமாநாத், பேரிடர் மேலாண்மை ஆணையர் டி.ஜெகந்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கரோனா பரவல் அதிகரித்து வரும் மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், மற்ற மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், காய்ச்சல் முகாம்நடத்துவது, தொற்று பாதித்தவர்களுடன் தொடர்புடையவர்களைகண்டறிவது, படுக்கை வசதிகளைஅதிகரிப்பது, தடுப்பூசி குறித்துவிழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றி இதில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
கரோனா பாதிப்பு அதிகம் உள்ளமாநில முதல்வர்களுடன் பிரதமர்நரேந்திர மோடி இன்று காணொலியில் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் தமிழகம் சார்பில் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் பங்கேற்று, தமிழகத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்துஎடுத்துரைப்பார். இதுதொடர்பாகவும் நேற்று ஆலோசிக்கப்பட்டது.
பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு, மத்திய அரசின்அறிவுறுத்தல்களை பெற்று, தமிழகத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிகிறது.