Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

தேர்தலுக்காக சென்றவர்கள் ஊர் திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசு போக்குவரத்து கழகம் தகவல்

தேர்தலையொட்டி சொந்த ஊர்சென்றவர்கள் திரும்ப வசதியாக இன்று இரவு வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர் சென்று வாக்களிக்க வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் கடந்த 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

5.50 லட்சம் பேர் பயணம்

அதன்படி பல்வேறு வழித்தடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் உட்பட 14,215 பேருந்துகள்இயக்கப்பட்டன. இவற்றின் மூலம் சென்னையில் இருந்து மட்டும் 5.50 லட்சத்துக்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

போக்குவரத்து தொழிலாளர்கள் வாக்களிக்க சென்றதால் கடந்த 6-ம் தேதி மட்டும் அரசு பேருந்துகள் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், மக்கள் போதிய பேருந்து வசதிகள் இன்றி அவதிப்பட்டனர்.

இந்நிலையில், தேர்தலுக்காக சொந்த ஊர் சென்றவர்கள் அவரவர் இருப்பிடம் திரும்பும் வகையில் நேற்று காலை முதல் பல்வேறு இடங்களுக்கும் கூடுதல்சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதுபற்றி அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘தேர்தலுக்காக சொந்தஊர் சென்றவர்கள் 6-ம் தேதி மாலை முதலே அவரவர் இருப்பிடம் திரும்பத் தொடங்கினர். இதற்காக, 7-ம் தேதி காலை முதல் மதுரை, திருச்சி, கோவை,நெல்லை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் இருந்து தேவைக்கு ஏற்ப சிறப்புபேருந்துகளை அதிகரித்து இயக்குகிறோம். கூட்டத்தை பொருத்து, 8-ம் தேதி (இன்று) இரவு வரை சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x