

சென்னையில் வரும் 17 முதல் 20-ம் தேதி வரை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளவிருந்த ‘நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம்’ தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
வரும் 21-ம் தேதி காஞ்சி புரம் மாவட்டம் ஆப்பூரில் நடை பெறவிருந்த பொதுக்கூட்டமும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தியில், ‘‘சென்னை வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய மாவட்டங்களில் வரும் 17 முதல் 20-ம் தேதி வரை திமுக பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம்’ மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.
நவம்பர் 21-ம் தேதி காஞ்சி புரம் மாவட்டம் ஆப்பூரில் ‘உறுதி முழக்கப் பேரணி பொதுக் கூட்டம்’ நடைபெறுவதாக இருந் தது. பெரும் மழை காரணமாக இந்த இரு நிகழ்ச்சிகளும் தள்ளிவைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமக்கு நாமே முதல் கட்ட பயணத்தை கடந்த செப்டம்பர் 20-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கினார். இதுவரை சென்னை தவிர தமிழகம் முழுவதும் 3 கட்ட பயணத்தை அவர் நிறைவு செய்துள்ளார்.