

சிவகங்கை மாவட்டம், சிங்கம்பு ணரியில் நடந்த மஞ்சுவிரட்டில் ஆயிரம் காளைகள் பங்கேற்றன. இதில் 25 பேர் காயமடைந்தனர்.
சிங்கம்புணரி இளவட்ட மஞ்சு விரட்டு ஆண்டுதோறும் பங்குனி மாதம் கடைவீதியில் நடத்தப்பட்டு வந்தது. இந்தாண்டு மார்ச் 26-ம் தேதி சேவுகப்பெருமாள் கோயில் நிலத்தில் பெரிய அளவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தேர்தலால் ஏப்.7-ம் தேதிக்கு மஞ்சு விரட்டு தள்ளி வைக்கப்பட்டது.
நேற்று காலை சிங்கம்புணரி கிராமத்தார் சந்திவீரன் கூடத்தில் வழிபாடு நடத்தினர். அங்கிருந்து ஊர்வலமாக மஞ்சுவிரட்டு திட லுக்கு சென்றனர். தொடர்ந்து சேவுகப்பெருமாள் கோயில் மாடு களை அவிழ்த்து விட்டனர்.
அதைத்தொடர்ந்து தொழு மாடுகளும், கட்டு மாடுகளும் அவிழ்க்கப்பட்டன. இதில் புதுக்கோட்டை, திண்டுக்கல் உள் ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. மாடுகள் முட்டியதில் 25 பேர் காயமடைந்தனர்.