சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? - முகவர்கள், நிர்வாகிகளுடன் வேட்பாளர்கள் முக்கிய ஆலோசனை

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? - முகவர்கள், நிர்வாகிகளுடன் வேட்பாளர்கள் முக்கிய ஆலோசனை
Updated on
1 min read

தங்களின் வெற்றி வாய்ப்பை அறிய வாக்குப்பதிவு குறித்து வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் வேட்பாளர் கள் ஆலோசனை நடத்தினர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. மதுரை மாவட்டத்தில் 70.33 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு நடந்தபோது காலை முதலே வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் தொகுதி முழுக்கச் சுற்றி வந்து கண் காணித்தனர். வாக்குப்பதிவு முடிந்ததும் முக்கிய முகவர்கள், வாக்குச்சாவடி வாரியாக நியமிக் கப்பட்ட பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகளுடன் வேட்பாளர்கள் ஆலோசனை நடத்தினர்.

குறிப்பாக அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உத யகுமார், திமுக கூட்டணி வேட் பாளர்கள் உள்ளிட்ட பலரும் ஆலோசனை நடத்தினர்.

இது குறித்து அரசியல் கட்சியினர் கூறியது: அமைச்சர்கள் மற்றும் அதிமுக, திமுக வேட்பாளர்கள் தங்கள் வெற்றிக்கான வாக்குகள் பதி வாகியுள்ளதா என்பதை அறிய மிகுந்த ஆர்வம் காட்டினர். பல்வேறு தகவல்களைத் தெரிவித்தோம். கிராமப்பகுதிகளில் வாக்குகள் கூடுதலாகவும், நகர் பகுதிகளில் குறைவாகவும் பதிவாகியுள்ளன.

மதுரை மாவட்டத்தில் சோழ வந்தானில் 79.47% வாக்குகள் பதிவான நிலையில், மதுரை மத்திய தொகுதியில் 61.21% பதிவாகியுள்ளது. மதுரை நகரிலுள்ள 4 தொகுதிகளிலும் 61.21 முதல் 65.15 சதவீதம் வரையில் மட்டுமே பதிவாகியுள்ளன. இதற்கு வாக்காளர்களைப் பெரிய அளவில் ஈர்க்காத வகையில் வேட்பாளர்களின் பிரச்சாரம் அமைந்திருக்கலாம்.

கிராமப்பகுதிகளை உள்ள டக்கிய தொகுதிகளில் 71.32 % முதல் 79.47 % வரையில் பதிவாகியுள்ளன. இது எந்தக் கட்சிக்குச் சாதகமாக இருக்கும் என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

மேலூரில் 8,500, திருமங் கலத்தில் 6 ஆயிரம் வாக்குகள் என மதுரை புறநகரிலுள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பெண்களின் வாக்குகள் ஆண் களின் வாக்குகளை விட அதி கமாகப் பதிவாகியுள்ளன.

அதேநேரம் மதுரை மாநகரி லுள்ள 4 சட்டப்பேரவைத் தொகு திகளிலும் பெண்களைவிட சுமார் 4 ஆயிரம் ஆண்கள் கூடுதலாக வாக்களித்துள்ளனர். இது யாருக்குச் சாதகமாக இருக் கும் என்பது குறித்து விவரம் சேகரிக்கப்பட்டது. வார்டு மற்றும் ஒன்றியப் பகுதிகள், சாதி, மத ரீதியாக அதிக வாக்காளர்கள் கொண்ட பகுதிகள், தங்களுக்குச் சாதகமானதாக, எதிரானதாக கருதப்பட்ட பகுதிகள் என பல்வேறு வகையாக பதிவான வாக்குகளைக் கணக்கீடு செய்து தங்களுக்கான வெற்றி வாய்ப்பு குறித்து முடிவு செய்தனர்.

நாங்கள் தெரிவித்த கருத்தை முழுமையாக ஏற்காமல் உளவுத் துறை உள்ளிட்ட பல் வேறு வழிகளில் பெறப்பட்ட தகவல்களுடன் ஒப்பீடு செய்து சரி பார்த்தனர். இதன் அடிப்படையில் தங்களின் கட்சித் தலைமைக்கு வெற்றிவாய்ப்பு குறித்த தகவல்களை அனுப்பியுள்ளனர். கட்சித் தலைமையிலிருந்து கேட்ட பல்வேறு தகவல்களையும் பெற்று அனுப்பியுள்ளனர். இந்த ஆலோசனை மேலும் ஓரிரு நாட்கள் நீடிக்கும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in