Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி தொகுதியில் - குறைவாக வாக்களித்த பெண் வாக்காளர்கள்: கடந்த 2016 தேர்தலை விட போளூரில் குறைந்தபட்ச வாக்குப்பதிவு

கோப்புப்படம்

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் வந்தவாசி தொகுதியில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் குறைவாகவாக்களித்துள்ளனர். அதேபோல்,கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலைவிட போளூரில் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 122 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், 10 லட்சத்து 17 ஆயிரத்து 322 ஆண்கள், 10 லட்சத்து 60 ஆயிரத்து 26 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 92 பேர் என மொத்தம் 20 லட்சத்து 77 ஆயிரத்து 440 பேர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதில், செங்கம் தொகுதியில் (80.67%), திருவண்ணாமலை தொகுதியில் (71.77%), கீழ்பென் னாத்தூர் தொகுதியில் (79.40%), கலசப்பாக்கம் தொகுதியில் (79.69%), போளூர் தொகுதியில் (79.38%), ஆரணி தொகுதியில் (79.88%), செய்யாறு தொகுதியில் (81.67%) வந்தவாசி தொகுதியில் (76.47%) சதவீதம் என மாவட்டத்தில் சராசரியாக 78.55 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

வாக்குப்பதிவு விவரம்

செங்கம் தொகுதியில் 1,10,359 ஆண்கள், 1,11,442 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 803 பேர் வாக்களித்துள்ளனர். திருவண்ணாமலை தொகுதியில் 1,00,227 ஆண்கள், 1,05,284 பெண்கள், மூன்றாம் பாலினத் தவர்கள் 10 பேர் என மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 521 பேர் வாக்களித்துள்ளனர். கீழ் பென்னாத்தூர் தொகுதியில் 98,606 ஆண்கள், 1,02,353 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் ஒருவர் என மொத்தம் 2 லட்சத்து 959 பேர் வாக்களித்துள்ளனர். கலசப் பாக்கம் தொகுதியில் ஆண்கள் 95,841 பேர், பெண்கள் 97,655 பேர் என மொத்தம் 1 லட்சத்து 93 ஆயிரத்து 496 பேர் வாக்களித்துள்ளனர்.

போளூர் தொகுதியில் ஆண்கள் 95,231 பேர், பெண்கள் 98,312 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 3 பேர் என மொத்தம் 1 லட்சத்து 93 ஆயிரத்து 546 பேர் வாக்களித்துள்ளனர். ஆரணி தொகுதி யில் ஆண்கள் 1,08,477 பேர், பெண்கள் 1,12,051 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் 3 பேர் என மொத்தம் 2,20,531 பேர் வாக்களித்துள்ளனர்.

செய்யாறு தொகுதியில் ஆண்கள் 1,06,243 பேர், பெண்கள் 1,05,888 பேர் என மொத்தம் 2 லட்சத்து 12 ஆயிரத்து 131 பேர் வாக்களித்து ள்ளனர். வந்தவாசி தொகுதியில் ஆண்கள் 92 ஆயிரத்து 458 பேர், பெண்கள் 91 ஆயிரத்து 473 பேர் என மொத்தம் 1 லட்சத்து 83 ஆயிரத்து 931 பேர் வாக்களித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 8 லட்சத்து 7 ஆயிரத்து 442 ஆண்கள், 8 லட்சத்து 24 ஆயிரத்து 458 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 19 பேர் என மொத்தம் 16 லட்சத்து 31 ஆயிரத்து 918 பேர் வாக்களித்துள்ளனர்.

பெண்களின் வாக்குகள் குறைவு

திருவண்ணாமலை மாவட் டத்தில் அனைத்து தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக ஆண்களை விட பெண்கள் 17 ஆயிரத்து 16 பேர் அதிகமாக வாக்களித்துள்ளனர். ஆனால், வந்தவாசி தொகுதியில் மட்டும் ஆண்களை விட பெண்கள் 985 பேர் குறைவாக வாக்களித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட் டத்தில் உள்ள தொகுதிகளில் போளூரைத் தவிர்த்து மற்ற 7 தொகுதிகளில் கடந்த 2016 தேர் தலைவிட கூடுதலாக வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போளூர் தொகுதியில் மட்டும் 2,168 வாக்காளர்கள் குறைவாக வாக்களித்துள்ளனர்.

2016 தேர்தல் நிலவரம்

செங்கம் (தனி) தொகுதியில் கடந்த 2016 தேர்தலில் 2,50,015 வாக்காளர்களில் தபால் வாக்கு களுடன் சேர்த்து மொத்தம் 2,10,403 (84.16%) வாக்குகள் பதிவாகியிருந்தன. திருவண்ணாமலை தொகுதியில் 2,55,195 வாக்காளர் களில் 2,03,825 (79.87%)பேர் வாக்களித்துள்ளனர். கீழ்பென் னாத்தூர் தொகுதியில் 2,33,605 வாக்காளர்களில் மொத்தம் 1,97,287 (84.45%)பேர் வாக்களித்துள்ளனர்.

கலசப்பாக்கம் தொகுதியில் 2,19,301 வாக்காளர்களில் 1,85,859 (84.75%) பேர் வாக்களித்துள்ளனர். போளூர் தொகுதியில் 2,27,936 வாக்காளர்களில் 1,95,714 (85.86%) பேர் வாக்களித்துள்ளனர். ஆரணி தொகுதியில் 2,56,327 வாக் காளர்களில் 2,09,545 (81.75%) பேர் வாக்களித்துள்ளனர். செய் யாறு தொகுதியில் 2,43,084 வாக் காளர்களில் 2,05,813 (84.67%) பேர் வாக்களித்துள்ளனர். வந்தவாசி (தனி) தொகுதியில் 2,22,453 வாக் காளர்களில் 1,81,476 (81.58%) பேர் வாக்களித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x