அமைச்சர் நிலோபர்கபீல் பெயரை பயன்படுத்தி அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2.10 லட்சம் மோசடி: அதிமுக நகர செயலாளர்கள் மீது எஸ்பி அலுவலகத்தில் புகார்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

அரசு வேலை வாங்கித் தருவதா கக் கூறி ரூ.2.10 லட்சம் மோசடி செய்த அதிமுக நகரச்செயலாளர் கள் மீது அரசு அனைத்துத்துறை பணியாளர்கள் சங்கம் சார்பில் திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர்கள் சங்கத்தின் மாநில கவுரவத்தலைவர் ராஜவேலு என்பவர் திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அம் மனுவில் கூறியிருப்பதாவது,

‘‘ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர் மணி என்பவருக்கு, திருப் பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியைச் சேர்ந்த பழனி என்பவர் மூலம் உதயேந்திரம் பேரூராட்சி அதிமுக நகரச்செயலாளர் சரவணன் மற்றும் வாணியம்பாடி அதிமுக நகரச்செயலாளர் சதாசிவம் ஆகிய 2 பேரும் அறிமுகமாகினர்.

அப்போது, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீலிடம் சிபாரிசு செய்து மணி மகன்தினேஷூக்கு தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறையில் காலியாக உள்ள எழுத்தர் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்காக ரூ.8 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் எனக்கூறினர்.

அவர்கள் கூறியபடி கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி அதிமுக நகரச்செயலாளர் சரவணனிடம் ரூ.2 லட்சமும், அக்டோபர் 12-ம் தேதி அதிமுக நகரச்செயலாளர் சதாசிவம் மற்றும் சரவணன் ஆகியோரிடம் ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.8 லட்சம் கொடுக்கப்பட்டது.

மிரட்டல் விடுப்பு

பணத்தை பெற்ற அதிமுக நிர்வாகிகள் இதுவரை அரசு வேலை வாங்கித் தரவில்லை. எனவே, கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டதில் ரூ.5.90 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்துவிட்டு பாக்கியுள்ள ரூ.2.10 லட்சத்தை கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளனர். இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து அரசு அனைத்துத்துறை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கேட்டபோது, பாக்கி பணத்தை தர முடியாது என்றும், வேண்டுமென்றால் காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் எனக்கூறி மிரட்டல் விடுகின்றனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

எனவே, அமைச்சர் நிலோபர்கபீலின் பெயரை பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த அதிமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதுடன், பாக்கியுள்ள ரூ.2.10 லட்சம் பணத்தையும் மீட்டு தர வேண்டும்’’ என தெரிவித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in