

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என, அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலில் இன்று மாலை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தங்கரதம் இழுத்து சுவாமிதரிசனம் செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தாராபுரத்தில் என்னுடைய வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி 20 தொகுதிகளிலும் வெற்றிபெறும்.
திமுகவிற்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லை. பணநாயகத்தில் நம்பிக்கை வைத்தனர். இதற்கான விடை மே 2 ல் தெரியவரும். அதிமுக அரசு முதல்வர் பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சியமைக்கும்.
ஆட்சியில் பங்கேற்பது குறித்து எங்கள் கட்சித்தலைமை தான் முடிவெடுக்கும்.