Published : 07 Apr 2021 06:26 PM
Last Updated : 07 Apr 2021 06:26 PM

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் 4,10,054 பேர் வாக்களிப்பு: 69.86% வாக்குப்பதிவு

பிரதிநிதித்துவப் படம்

உதகை

சட்டப்பேரவைத் தேர்தலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய 3 தொகுதிகளில் 4 லட்சத்து 10 ஆயிரத்து 54 பேர் வாக்களித்துள்ளனர். சராசரியாக 69.86 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளில் மொத்தம் 5 லட்சத்து 86 ஆயிரத்து 950 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 2 லட்சத்து 82 ஆயிரத்து 623 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 4 ஆயிரத்து 319 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 8 பேரும் உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 868 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு நேற்று (ஏப்.07) வாக்குப் பதிவு நடைபெற்றது.

உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் 2 லட்சத்து 5,882 வாக்காளர்களில் 69 ஆயிரத்து 232 ஆண்கள் மற்றும் 70 ஆயிரத்து 394 பெண்கள் என மொத்தம் 1 லட்சத்து 39 ஆயிரத்து 626 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

கூடலூர் தொகுதியில் உள்ள 1 லட்சத்து 89 ஆயிரத்து 155 வாக்காளர்களில், 67 ஆயிரத்து 398 ஆண்கள் மற்றும் 69 ஆயிரத்து 98 பெண்கள் என 1 லட்சத்து 36 ஆயிரத்து 496 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

குன்னூர் தொகுதியில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 913 வாக்காளர்களில், 65 ஆயிரத்து 863 ஆண்கள் மற்றும் 68 ஆயிரத்து 68 பெண்கள் என மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 931 பேர் வாக்களித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 5 லட்சத்து 86 ஆயிரத்து 950 வாக்காளர்களில் 4 லட்சத்து 10 ஆயிரத்து 54 பேர் நேற்று நடந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர். இதில், 2 லட்சத்து 2 ஆயிரத்து 493 ஆண்களும், 2 லட்சத்து 7 ஆயிரத்து 560 பெண்களும் வாக்களித்துள்ளனர்.

திருநங்கைகள் 8-ல் ஒருவர் வாக்கு:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளில் உள்ள 8 திருநங்கைகளில் கூடலூரில் உள்ள இருவரில் ஒருவர் மட்டுமே வாக்களித்துள்ளார். உதகை தொகுதியில் உள்ள 6 பேரில் யாரும் வாக்களிக்கவில்லை.

மொத்தம் 69.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x