

புதுச்சேரியில் கடந்த தேர்தலை விட இந்த முறை பதிவான வாக்குகள் 2.41 சதவீதம் குறைந்துள்ளன. 30 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவில் ஏனாம் தொகுதி முதலிடத்திலும், ராஜ்பவன் தொகுதி இறுதி இடத்திலும் உள்ளன.
புதுவையில் 2016-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 84.11 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. தற்போதைய 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 81.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதால், கடந்த தேர்தலை விட 2.41 சதவீத வாக்குகள் குறைந்துள்ளன.
இதில், அதிக அளவாக ஏனாம் தொகுதியில் 91.28 சதவீதமும், குறைந்த அளவாக ராஜ்பவன் தொகுதியில் 72.68 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
மண்ணாடிப்பட்டு- 87.78, திருபுவனை- 86.55, ஊசுடு- 88.46, மங்கலம்- 86.28, வில்லியனூர்- 81.45, உழவர்கரை - 76.14, கதிர்காமம் - 76.32, இந்திரா நகர்- 79.99, தட்டாஞ்சாவடி -75.09, காமராஜர் நகர்- 76.78, லாஸ்பேட்டை - 78.99, காலாப்பட்டு- 84.47, முத்தியால்பேட்டை- 77.09, ராஜ்பவன்- 72.68, உப்பளம்- 83.70, உருளையன்பேட்டை - 80.54, நெல்லித்தோப்பு- 81.33, முதலியார்பேட்டை - 81.14, அரியாங்குப்பம் - 82.45, மணவெளி - 85.16, ஏம்பலம் -87.37, நெட்டப்பாக்கம்-85.77, பாகூர்- 87.90, நெடுங்காடு-82.94, திருநள்ளாறு- 83.89, காரைக்கால் வடக்கு- 77.40, காரைக்கால் தெற்கு -75.09, நிரவிதிருப்பட்டினம்- 81.50, மாஹே -73.54, ஏனாம் -91.28. மொத்தம்- 81.70 சதவீதம்.
மாற்றம் செய்யப்பட்ட இயந்திரங்கள்
தேர்தலின்போது 31 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 36 கட்டுப்பாட்டுக் கருவிகள், 113 வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை சாதனங்கள் மாற்றம் செய்யப்பட்டன. இறுதி விவரங்களைத் தேர்தல் துறையானது இன்று செய்திக்குறிப்பாக வெளியிட்டது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பை மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.