கரூர் மாவட்டத்தில் தமிழகத்திலேயே அதிக வாக்குப்பதிவு: தொகுதி வாரியாக நிலவரம்

கரூர் மாவட்டத்தில் தமிழகத்திலேயே அதிக வாக்குப்பதிவு: தொகுதி வாரியாக நிலவரம்
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவில் கரூர் மாவட்டம் 83.92 சதவீத வாக்குப்பதிவுடன் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. தொகுதிவாரியான வாக்குப் பதிவில் குளித்தலை தொகுதி 86.15 சதவீத வாக்குப்பதிவுடன் மாநில அளவில் 2-ம் இடம் பெற்றுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே கரூர் தொகுதி மற்றும் மாவட்டம் தமிழக அளவில் கவனம் ஈர்த்து வந்தது. தேர்தல் ஆணையத்திற்கு தமிழக அளவில் அதிக புகார்கள் வரப்பெற்ற தொகுதி மற்றும் மாவட்டமாக கரூர் இருந்தது.

77 வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக கரூர் மாநில அளவில் கவனமும் பெற்றது. தற்போது 83.92 சதவீத வாக்குப் பதிவுடன் தமிழக அளவில் அதிக வாக்குகள் பதிவான மாவட்டம் என்ற பெருமையோடு முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் தொகுதி வாரியாக வாக்காளர் விவரம்:

அரவக்குறிச்சி 1,01,902 ஆண், 1,11,201 பெண், 7 இதரர் என மொத்தம் 2,13,110.

கரூர் 1,15,834 ஆண், 1,28,321 பெண், 19 இதரர் என மொத்தம் 2,44,174.

கிருஷ்ணராயபுரம் (தனி) 1,03,736 ஆண், 1,08,865 பெண், 43 இதரர் என மொத்தம் 2,12,644.

குளித்தலை 1,10,462 ஆண், 1,16,312 பெண், 11 இதரர் என மொத்தம் 2,26,785.

4 தொகுதிகளிலும் சேர்த்து கரூர் மாவட்டத்தில் மொத்தம் 4,31,934 ஆண், 4,64,699 பெண், 80 இதரர் என மாவட்டத்தில் மொத்தம் 8,96,713 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 83.92 சதவீத வாக்குப் பதிவுடன் தமிழக அளவில் அதிக வாக்குகள் பதிவான மாவட்டம் என்ற பெருமையோடு, கரூர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அதேபோல தமிழக அளவில் கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதி 86.15 சதவீதத்துடன் தமிழக அளவில் 2-ம் இடம், கிருஷ்ணராயபுரம் தொகுதி 84.14 சதவீதத்துடன் மாநில அளவில் 9-ம் இடம். கரூர் தொகுதி 83.50 சதவீதத்துடன் மாநில அளவில் 12-ம் இடம், அரவக்குறிச்சி தொகுதி 81.90 சதவீதத்துடன் மாநில அளவில் 21-ம் இடத்தைப் பெற்றுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in