

தமிழக வாக்குப்பதிவு இறுதி நிலவரம் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் இறுதிப்படுத்தப்பட்ட வாக்குப்பதிவாக 72.78 சதவீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகப்பட்ச வாக்குப்பதிவாக கரூர் மாவட்டமும், சென்னையில் மிகக்குறைவான வாக்குப்பதிவும் நடந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 234 தொகுதிகள், கன்னியாகுமரி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு நிலவரங்கள் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வெளியானது. தமிழகத்தில் முதன்முறையாக 12 மணி நேர வாக்குப்பதிவு நடந்தது.
இதில் கடைசி ஒரு மணி நேரம் கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டது. வாக்குப்பதிவு விவரங்கள் வெளியானதில் ஆரம்பத்திலிருந்தே நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் முன்னணியில் இருந்தன. நெல்லை மாவட்டம் பின் தங்கியே குறைவான வாக்குப்பதிவுடனே இருந்தது. அதற்கு அடுத்து சென்னை மாவட்டம் குறைந்த அளவே வாக்குப்பதிவு ஆனது.
நேற்றிரவு 7 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு முடிந்தவுடன் தோராயமான வாக்குப்பதிவு முடிவுகள் வெளியானது. பின்னர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு கூறுகையில் “வாக்குப்பதிவு முடிந்துள்ளது. தற்போது வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை சீலிட்டு அதை வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பும் முக்கியப் பணியில் உள்ளனர். அதனால் போனில் வாங்கிய தகவல் அடிப்படையில் தற்போதைக்கு வாக்குப்பதிவு நிறைவு குறித்த தோராய எண்ணிக்கையை வாங்கியுள்ளோம். சரியான வாக்குப்பதிவு குறித்த எண்ணிக்கை தெரிய நள்ளிரவு 1 மணி வரை ஆகும்.
தற்போது தோராய வாக்குப்பதிவு சதவீதத்தின்படி தமிழகத்தின் வாக்குப்பதிவு மாலை 7 மணி வரை முடிந்த சதவீதம் 71.79 சதவீதம் ஆகும். அதிகபட்ச வாக்குப்பதிவு கள்ளக்குறிச்சி 78 சதவீதம், அடுத்து நாமக்கல் 77.91 சதவீதம், அடுத்து அரியலூர் 77.88 சதவீதம். குறைந்தபட்சமாக வரும் மாவட்டங்களில் முதலிடம் சென்னை 59.40 சதவீதம், அடுத்து செங்கல்பட்டு 62.77 சதவீதம், அடுத்து நெல்லை 65.16 சதவீதம் ஆகும். இவை தோராய சதவீதம் மட்டுமே. நாளை முழுமையான நிலவரம் வரும். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எதுவும் புகார் ஆகவில்லை” என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை முழுமையான அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு முடிவு வெளியானது. இதில் தமிழகம் முழுவதும் 72.78 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
இதில் சென்னை மாவட்டத்தில் குறைவான அளவு வாக்குப்பதிவு ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 83.92% வாக்குப்பதிவாகியுள்ளன. குறைந்தப்பட்சமாக சென்னை 59.06% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
மாவட்டவாரியான பதிவான வாக்குகள் சதவீதம் இறுதிபடுத்தப்பட்டது. கீழே