

தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர்களாக தமிழகத்தை சேர்ந்த நீதிபதி எம்.சத்தியநாராயணன், முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், முன்னாள் வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தவழக்குகளை விசாரிக்க டெல்லியில் தேசிய பசுமை தீர்ப்பாய முதன்மை அமர்வு உருவாக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக சென்னை கொல்கத்தா, புணே, போபால் ஆகிய இடங்களிலும் மண்டல அமர்வுகள் தொடங்கப்பட்டன. இவற்றுக்கு நீதித்துறை உறுப்பினராக நியமிக்க தமிழகத்தை சேர்ந்த உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன், முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், முன்னாள் வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் பெயர்களை பரிந்துரைத்து மத்திய அரசுக்கு மத்தியசுற்றுச்சூழல் அமைச்சகம் கருத்துருஅனுப்பியது. அதற்கு மத்திய அரசுகடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.
அதன் அடிப்படையில் புணேயில்உள்ள பசுமை தீர்ப்பாய மேற்கு மண்டல அமர்வின் நீதித்துறை உறுப்பினராக எம்.சத்தியநாராயணனையும், தொழில்நுட்ப உறுப்பினராக கே.சத்யகோபாலையும், சென்னை தென் மண்டல அமர்வின் தொழில்நுட்ப உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதனையும் நியமித்து தீர்ப்பாயத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.