Published : 07 Apr 2021 03:16 AM
Last Updated : 07 Apr 2021 03:16 AM

இன்று முதல் 10-ம் தேதி வரை மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்

சென்னை

கும்மிடிப்பூண்டி தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால், இன்றுமுதல் 10-ம்தேதி வரையில் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில், கும்மிடிப்பூண்டி - கவரைப்பேட்டை இடையே இன்று முதல் 10-ம் தேதி வரையில்பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளன. இதனால், மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மேற்கண்ட நாட்களில் சென்னை கடற்கரை -சூலூர்பேட்டை இடையிலான மதியம் 12.40 மணி ரயில் எளாவூர் வரையிலும், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே மதியம் 1.25, மாலை 3.15 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் மீஞ்சூர் வரையிலும் செல்லும்.

சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை இடையே மதியம் 2.35 மணிக்கு இயக்கப்படும் ரயில் பொன்னேரி வரையிலும், வேளச்சேரி - கும்மிடிப்பூண்டி இடையிலான மதியம் 1.55, 2.55 மணிரயில்களும், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையிலான மாலை 4.35 மணி ரயிலும் பொன்னேரி வரையில் இயக்கப்படும். கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் இடையே மதியம் 3.40 மணிக்கு இயக்கப்படும் ரயில் மீஞ்சூர் வரையில் இயக்கப்படும். கும்மிடிப்பூண்டி - வேளச்சேரி மாலை 4.30 மணி ரயில் பொன்னேரி ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் இடையே மாலை 5, 5.30, 6.10 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

3 ரயில்கள் ரத்து

கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் மதியம் 3.15, சூலூர்பேட்டை - சென்னை சென்ட்ரலுக்கு மதியம் 3.10, சூலூர்பேட்டை - வேளச்சேரிக்கு மாலை 5.15 மணிக்கு இயக்க வேண்டிய மின்சார ரயில்களின் சேவை இன்று முதல் வரும் 10-ம் தேதி வரையில் ரத்து செய்யப்படுகிறது. இதற்கு, மாற்றாக மேற்கண்ட நாட்களில் கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் இடையே மதியம் 1.55 மணிக்கும், எளாவூர் - சென்னை சென்ட்ரல் இடையே மதியம் 2.10 மணிக்கும், பென்னேரி - சென்னை சென்ட்ரல் இடையே மாலை 4.20 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறுசெய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x