

தமிழகத்தில் மாற்றுச் சிந்தனை கொண்ட ஆட்சி அமைய வேண்டும் என முதல் தலைமுறை வாக் காளர்கள் தெரிவித்தனர்.
மதுரையில் நேற்று நடந்த வாக்குப் பதிவின்போது, முதல் தலைமுறையினர் ஏராளமானோர் ஆர்வத்துடன் வாக்களித்தனர். அவர்கள் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
ஹரிபிரசாத், மகேசு வரன் (இளங்கோ மாநகராட்சி மேல் நிலைப் பள்ளி):
இத்தேர்தலில் முதன் முறையாக வாக்களிக்க உரிமை கிடைத்தில் மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களைப் பொறுத்தவரை பழையவர்களைக் காட்டிலும், தமிழகத்துக்குப் புதியவர்களின் ஆட்சி தேவை எனக் கருதுகிறோம்.
எங்களைப் போன்ற வர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும்.
சிவானி, (மீனாட்சி கல்லூரி வாக்குச்சாவடி):
புதியவர்கள் ஆட்சி அமைய வேண்டும். இனச்சுழற்சி இன்றி மதிப்பெண், திறமையின் அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்புக்களை வழங்கும் அரசு வேண்டும்.
ஜெயவர்த்தனி (ஜோசப் மகளிர் மேல்நிலைப் பள்ளி):
கல்லூரியில் படிக்கிறேன். முதல் முறையாக வாக்களிப்பது சந்தோஷமாக உள்ளது. இந்த வாக்கு நல்லவர்கள் ஆட்சிக்கு வரப் பயன்படும் எனக் கருதுகிறேன். மாற்று சிந்தனை கொண்டவர் முதல்வராக வேண்டும்.
மாற்றுத் திறனாளி ராஜாத்தி (அம்பிகா கல்லூரி): கடந்த 4 ஆண்டுகளில் என்னைப் போன்ற மாற்றுத் திற னாளிகளுக்கு உதவிகள் கிடைத்துள்ளன. தற் போதைய ஆட்சி மீண்டும் வர வேண்டும்.
மகேஸ்வரி (விருதுநகர் கே.வி.எஸ். தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடி):
பட்டப் படிப்பு படித்து வருகிறேன். வரலாற்று மாணவியான நான் குடவோலை முறையில் ராஜராஜன் அறிமுகம் செய்த வாக்குச் செலுத்தும் முறை குறித்து படித்துள்ளேன்.
அப்போது முதல் வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வந்தது. முதல் முறையாக எனது வாக்கைச் செலுத்தியதற்காகப் பெரு மைப்படுகிறேன்.
பிருந்தா (சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப் பட்டிருந்த வாக்குச் சாவடி):
ஜனநாயகத்தில் வாக்கு என்பது மிகப் பெரிய ஆயுதம். அதை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும். நமக்கான சரியான தலைமையை தேர்ந்தெடுக்க நமக்குக் கிடைக்கும் ஒரே வாய்ப்பு இது.
இதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். முதல் முறையாக வாக்களித்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.